100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் மூக்குத்தி அம்மன் 2 : படத்தில் நடிப்பவர்கள் விபரம் | பாலிவுட்டை விட்டு விலக முடிவெடுத்த அனுராக் காஷ்யப் | என் பணியை சிறப்பாக செய்ய முயற்சிக்கிறேன் - கஜராஜ் ராவ் | விஷ்ணு விஷாலுக்கு வில்லன் ஆன செல்வராகவன்! | அடுத்த மாதம் 'ஜெயிலர் 2' படப்பிடிப்பு துவங்குகிறது | ராம்சரண் படத்திற்கு தயாரான சிவராஜ் குமார்! | நாகார்ஜூனா உடன் நடனமாடும் பூஜா ஹெக்டே! | பிளாஷ்பேக் : மோகன் கையில் மைக்கை கொடுத்த இயக்குனர் | பிளாஷ்பேக் : மறக்கடிக்கப்பட்ட மகா கலைஞன் கொத்தமங்கலம் சீனு | கோவில்களில் சினிமா பாட்டு பாட நீதிமன்றம் தடை |
சமீப காலமாக ஏற்கனவே வெற்றிபெற்ற படங்களின் இரண்டாம் பாகங்களை எடுக்கும் போக்கு அதிகரித்து வருகிறது. பாகுபலி படம் மிக நீளமான படமாக எடுக்கப்பட்டதால் அதன் காரணமாக இரண்டு பாகங்களாக வெளியானது. வெற்றியும் பெற்றது. அதேசமயம் இரண்டாம் பாகம் எடுத்தால் வெற்றி என்கிற நோக்கத்துடன் கேஜிஎப்-2, சிங்கம் 2 ஆகிய படங்கள் வெளியாகி வெற்றியும் பெற்றன. ஆனால் இதே பாணியை பின்பற்றி ஏற்கனவே வெற்றி பெற்ற படங்களான சாமி, சண்டக்கோழி, திருட்டுப்பயலே ஆகிய படங்களின் இரண்டாம் பாகங்கள் எடுக்கப்பட்டு தோல்வியை தழுவின.
இந்த நிலையில் மம்முட்டி நடிப்பில் 15 வருஷங்களுக்கு முன்பு வெளியாகி சூப்பர்ஹிட் ஆன ராஜமாணிக்கம் படத்தின் இரண்டாம் பாகத்திற்கு வாய்ப்பு இருக்கிறதா என சமீபத்தில் மம்முட்டியிடம் கேட்டபோது, “அதற்கு ஒரு சதவீதம் கூட வாய்ப்பு இல்லை.. அந்த படத்தின் கதை கிளைமாக்ஸில் இனிதே நிறைவடைந்து விட்டது. அதற்கு வலுக்கட்டாயமாக இரண்டாம் பாகம் எடுக்க முடியாது.. எடுக்கவேண்டிய தேவையும் இல்லை” என்று கூறியுள்ளார்.
அதே சமயம் கடந்த 30 வருடங்களாக அவர் தொடர்ந்து சேதுராம அய்யர் கதாபாத்திரத்தில் நடித்து வரும் சிபிஐ டைரி குறிப்பு படத்தின் ஐந்து பாகங்கள் இதுவரை வெளியாகி உள்ளன. கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் ஐந்தாம் பாகம் வெளியாகி வெற்றியை பெற்றது. இதுபற்றி மம்முட்டி குறிப்பிடும்போது இந்த படத்திற்கு ஆறாம் பாகமும் எடுக்க வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
கடந்த பத்து வருடங்களுக்கு முன் அவர் நடித்த போக்கிரி ராஜா படத்தின் வெற்றியை மனதில் வைத்துக்கொண்டு, வலுக்கட்டாயமாக இரண்டாம் பாகமாக மதுரராஜா என்கிற படத்தை எடுத்து அது மிகப்பெரிய தோல்வி கண்டதால், எந்த படங்களுக்கு அடுத்தடுத்த பாகங்கள் எடுக்கப்பட வேண்டும் என்பதை மம்முட்டி தெளிவாகவே புரிந்து வைத்துள்ளார்.