இந்த வாரமும் இத்தனை படங்கள் வெளியீடா... தாங்குமா...? | தமனின் கிரிக்கெட்டைப் பாராட்டிய சச்சின் டெண்டுல்கர் | 300 கோடியைக் கடந்த 3வது படம் 'ஓஜி' | பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் | ரஜினி திடீர் இமயமலை பயணம் | ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி | பிளாஷ்பேக்: 400 படங்களில் நடித்த கோவை செந்தில் | 300 கோடி வசூல் சாதனை புரிந்த 'லோகா' | பிளாஷ்பேக்: முதல் நட்சத்திர ஒளிப்பதிவாளர் | நான்கு நாட்களில் 300 கோடி வசூலைக் கடந்த 'காந்தாரா சாப்டர் 1' |
மலையாள நடிகர் திலீப் தனது மனைவி மஞ்சு வாரியருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதை தொடர்ந்து இருவரும் பரஸ்பரம் விவாகரத்து பெற்றார்கள். அதையடுத்து திலீப், தன்னுடன் அதிகமாக கிசுகிசுக்கப்பட்ட, விவாகரத்து பெற்றிருந்த நடிகை காவ்யா மாதவனை கடந்த 2016 நவம்பரில் இரண்டாவதாக திருமணம் செய்தார். இவர்களுக்கு மகலாட்சுமி என்கிற பெண் குழந்தையும் பிறந்தது.
அதேசமயம் திலீப் - மஞ்சு வாரியாருக்கு பிறந்த மகளான மீனாட்சி, பெற்றோரின் விவாகரத்துக்கு முன்னரே தாயை விட்டு பிரிந்து திலீப்புடன் வசித்து வந்தார். மகளின் ஒப்புதலுடன் தான் காவ்யா மாதவனை இரண்டாவதாக திருமணம் செய்தார் திலீப். சொல்லப்போனால் பெற்ற தாயான மஞ்சு வாரியரை விட, தனது சித்தியான காவ்யா மாதவனிடம் தான் மீனாட்சி அதிக ஒட்டுதலுடன் பிரியமாக இருந்து வருகிறார்.
இந்தநிலையில் நேற்று காவ்யா மாதவனின் பிறந்தநாள் என்பதால் அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக அவருடன் இணைந்து எடுத்துக்கொண்ட புதிய புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார் மீனாட்சி. அதேசமயம் சில மாதங்களுக்கு முன் வந்துசென்ற அவரது அம்மா மஞ்சு வாரியாரின் பிறந்தநாளுக்கு மகள் மீனாட்சி எந்த ஒரு வாழ்த்து சொல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.