பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
மலையாள திரையுலகில் கமர்சியல் இயக்குனராக வலம் வருபவர் இயக்குனர் ஷாஜி கைலாஷ். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கிட்டத்தட்ட 50 படங்களுக்கு மேல் இயக்கியுள்ள இவர், மோகன்லால், மம்முட்டி, சுரேஷ்கோபி ஆகியோரின் படங்களை மாறிமாறி இயக்கியவர். குறிப்பாக சுரேஷ் கோபியின் ஆஸ்தான இயக்குனராக, அவரது திரையுலக வளர்ச்சியில் துணை நின்றவர்.
இந்த நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு தமிழ் சினிமாவில் நடிகர் ஆர்கே வை வைத்து அடுத்தடுத்து படங்களை இயக்கிய ஷாஜி கைலாஷ் அதன் பிறகு மலையாள திரையுலகம் பக்கம் செல்லவே இல்லை. 2017ல் ஆர்கே நடித்த வைகை எக்ஸ்பிரஸ் என்கிற படத்தை இயக்கிய பிறகு கிட்டத்தட்ட 5 வருடங்கள் கழித்து தற்போது தான் அவரது அடுத்த படம் ரிலீசாக இருக்கிறது.
தற்போது பிரித்விராஜ் நடிப்பில் ஷாஜி கைலாஷ் இயக்கியுள்ள கடுவா என்கிற திரைப்படம் வரும் ஜூன் 30ஆம் தேதி ரிலீஸாவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப்படத்தில் கடுவாக்குன்னல் குஞ்சச்சன் என்கிற கதாபாத்திரத்தில் பிரித்விராஜ் நடித்துள்ளார். வில்லனாக பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் நடித்துள்ளார். லூசிபர் படத்திற்கு பிறகு மீண்டும் விவேக் ஓபராய் நடிக்கும் மலையாள படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.