நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்கு பாட்டு எழுதிய காளிமுத்து | பிளாஷ்பேக்: நாகேஸ்வர ராவின் தம்பியாக நடித்த நம்பியார் |
தெலுங்கு திரையுலகை பொறுத்தவரை சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா, வெங்கடேஷ் என மூன்று கலை குடும்பங்கள் தான் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இதில் அதிக அளவு செல்வாக்கு கொண்ட குடும்பமாக நடிகர் சிரஞ்சீவியின் குடும்பம் திகழ்கிறது. சிரஞ்சீவியின் குடும்பத்திலிருந்து அவரது தம்பிகளான பவன் கல்யாண், நாக பாபு, சிரஞ்சீவியின் மகன் ராம்சரண் மற்றும் சிரஞ்சீவியின் சகோதரிகளின் மகன்கள், சிரஞ்சீவியின் மைத்துனர் மகனான அல்லு அர்ஜுன், அல்லு சிரிஷ் என பலர் தெலுங்கு திரையுலகில் நடிகர்களாக வலம் வருகின்றனர். இவர்கள் அனைவருடனும் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தற்போது தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார் நடிகர் சிரஞ்சீவி.
இதுகுறித்து அவர் கூறும்போது, ஒரு முறை ருத்ரவீணா என்கிற படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான நர்கீஸ் தத் விருது சிரஞ்சீவிக்கு வழங்கப்பட்டது. இதை பெறுவதற்காக அவர் மும்பை சென்றபோது அந்த விழாவில் தான் ஏதோ ஒரு புதிய நடிகர் போல அவமானப்படுத்தப்பட்டதாக உணர்ந்துள்ளார் சிரஞ்சீவி.
அந்த விழாவில் பாலிவுட்டை சேர்ந்த கபூர் குடும்பத்தின் ஆதிக்கம்தான் மேலோங்கி இருந்ததாகவும் பின்னர் தனது தம்பி பவன் கல்யாணிடம் ஒருமுறை சிரஞ்சீவி கூறும்போது தென்னிந்தியாவின் கபூர் குடும்பம் போல நம் குடும்பம் திகழ வேண்டும் என தான் விரும்புவதாக கூறியதாகவும் குறிப்பிட்டுள்ளார் நடிகர் சிரஞ்சீவி.