பிளாஷ்பேக்: மெல்லிசை மன்னரின் 10ம் ஆண்டு நினைவு: விருதுகளை கடந்த கலைஞன் | சரோஜாதேவி மறைவு: முதல்வர், திரைப்பிரபலங்கள் இரங்கல் | சிவாஜிகணேசன் - சரோஜா தேவி இணைந்த நடித்த படங்கள் | எம்ஜிஆர் - சரோஜா தேவி இணைந்து நடித்த 26 படங்கள் | சூப்பர் குட் பிலிம்ஸ் 99வது தயாரிப்பில் விஷால் | 'தாமரை நெஞ்சம்' ஒரு படம் போதுமே: பாலசந்தர் அளித்த பதில் | தமிழில் தனது கடைசி படத்தில் நடித்த சரோஜா தேவி | ‛வெள்ளி விழா' படங்களில் முத்திரை பதித்த சரோஜா தேவி : வரிசை கட்டிய விருதுகள் | தனது உயிர் சென்னையில் பிரிய வேண்டும் என்று பேசியிருந்த சரோஜா தேவி | புதிய போட்டி வந்தாலும், சம்பளத்தை உயர்த்திய அனிருத் |
நடிகர் பிரித்விராஜ் மலையாளத்தில் நடித்து வரும் ‛ஆடுஜீவிதம்' படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட நான்கு வருடங்களாக சிறுசிறு இடைவெளிகளில் நடைபெற்று வருகிறது. இயக்குனர் பிளஸ்சி இயக்கத்தில் ஏ.ஆர் ரகுமான் இசையில் உருவாகும் இந்தப்படத்தில் அரபு நாடுகளில் ஒட்டகம் மேய்க்கும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் பிரித்விராஜ். இந்த படத்தில் கதாநாயகியாக அமலாபால் நடிக்கிறார்.
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு ஜோர்டன் நாட்டில் 'வாடி ரம்' எனப்படும் பாலைவனத்தை ஒட்டிய நகரத்தில் தங்கி படப்பிடிப்பை நடத்தி வந்த நிலையில் தான் கொரோனா முதல் அலை உருவானது. அதன் காரணமாக, திடீரென அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் அங்கேயே கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்கு மேல் தங்கி இருந்து, படப்பிடிப்பை நடத்த முடியாமல் ஊர் திரும்பினர் ஆடு ஜீவிதம் படக்குழுவினர்.
இதைத் தொடர்ந்து கடந்த இரண்டு வருடங்களில் மீண்டும் வெளிநாடு சென்று இந்த படத்தின் படப்பிடிப்பை நடத்த முடியாத சூழல் இருந்ததால் உள்ளூரிலேயே நான்கைந்து படங்களில் நடித்து முடித்துவிட்டார் பிரித்விராஜ்.
இந்த நிலையில் சமீபத்தில் அல்போன்ஸ் புத்ரன் நடிப்பில் உருவாகிவரும் கோல்ட் படத்தை முடித்து விட்ட பிரித்விராஜ் சில நாட்கள் ஓய்வெடுத்துவிட்டு தற்போது ஆடுஜீவிதம் படத்தின் படப்பிடிப்பை தொடர்வதற்காக அல்ஜீரியா சென்றுள்ளார். தற்போது சஹாரா பாலைவனத்தில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. அங்கிருந்து எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டு இந்த தகவலை கூறியுள்ளார் பிரித்விராஜ்.