பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
மலையாள சினிமாவின் முன்னணி நடிகர் மற்றும் இயக்குனர் சீனிவாசன். 200க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். தற்போது முன்னணி இயக்குனராக இருக்கும் வினித் சீனிவாசனின் தந்தை. தமிழில் பிரியதர்ஷன் இயக்கிய லேசா லேசா, பார்த்திபன் நடித்த புள்ளக்குட்டிக்காரன் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.
சீனிவாசனுக்கு கடந்த வாரம் திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது. இதை தொடர்ந்து அவர் அங்கமாலியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். அங்கு ஆஞ்சியோ பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது அவருக்கு இருதயத்திற்கு செல்லும் இரத்தக்குழாயில் அடைப்பு இருப்பது தெரியவந்ததை அடுத்து, சீனிவாசனுக்கு கடந்த மாதம் 31ம் தேதி இருதய அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது.
கடந்த சில நாட்களாக அவர் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்று திடீரென உடல்நலத்தில் பின்னடைவு ஏற்பட்டது. இதை தொடர்ந்து அவருக்கு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாவும் உயிருக்கு ஆபத்தான கடத்தை தாண்டி விட்டதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கிறது.