பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு பிரபல மலையாள நடிகை ஒருவர் காரில் கடத்தப்பட்டு பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட வழக்கில் நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளிவந்தார். இதனைத் தொடர்ந்து அந்த வழக்கு விசாரணை நடத்திய அதிகாரிகளை அவர் கொல்ல சதி திட்டம் தீட்டியதாகவும், கடத்தப்பட்ட நடிகையின் துன்புறுத்தல் சம்பந்தமான வீடியோ காட்சிகளை தனது மொபைல் போனில் பார்த்ததாகவும் திலீப்பின் நண்பராக இருந்து பின்னர் எதிரியாக மாறிய இயக்குனர் பாலச்சந்திரன் குமார் என்பவர் போலீசில் தானாகவே வந்து புகார் அளித்தார்.
இதனடிப்படையில் திலீப் மீது மற்றுமொரு வழக்கு பதியப்பட்டு அதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. ஆனால் இந்த வழக்கு உள்நோக்கம் கொண்டது என்றும் சிலரது விருப்பத்திற்காக இந்த வழக்கு தன் மீது போடப்பட்டு உள்ளதாகவும் அதனால் இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும், அப்படி இல்லை என்றால் சிபிஐ வசம் இந்த வழக்கை மாற்ற வேண்டும் என்றும் திலீப் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
தற்போது இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, காவல்துறையிடம் ஒரு நபர் வெறும் வாய் வார்த்தைகளால் எந்த ஆதாரமும் இன்றி ஒருவரை சந்தேகப்படுவதாக யூகங்களின் அடிப்படையில் புகார் அளித்தால் நீங்கள் அதை மட்டுமே ஆதாரமாக வைத்துக்கொண்டு நடிகர் திலீப் மீது எப்ஐஆர் பதிந்தது எப்படி என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த போலீஸ் அதிகாரிகள் குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு நெருக்கமாக இருந்த ஒரு நபர் போலீஸ் அதிகாரிகள் மீது இப்படி ஒரு கொலை சதி நடத்த நடிகர் திலீப் திட்டமிட்டு இருந்ததாக கூறியதைத் தொடர்ந்து அதன் பின்னணியில் என்ன நடந்திருக்கிறது என்பதை விசாரணை செய்வதற்காகவே இந்த எப்ஐஆர் பதியப்பட்டது என்று பதில் கூறினர்.
இந்த பதிவில் திருப்தி அடையாத நீதிபதி இப்போது இவர் மீது வழக்குப் பதிந்து உள்ள நீங்கள் 2017ல் அவர் சதித்திட்டம் தீட்டியதாக சொல்லப்பட்ட பின்னர் அதற்கான அறிகுறிகள் ஏதாவது நடைபெற்றதா என்பது பற்றி எதுவும் குறிப்பிடவில்லையே என்றும் கேள்வி எழுப்பினார்.