டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் | காந்தாரா கிராமத்தில் குடியேறுகிறார் ரிஷப் ஷெட்டி | பெண்கள் அரசியல் கூட்டங்களுக்கு செல்லக்கூடாது: அம்பிகா அட்வைஸ் | நயன்தாரா வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் | பிளாஷ்பேக்: மம்பட்டியான் பாணியில் உருவான 'கரிமேடு கருவாயன்' | பிளாஷ்பேக்: தமிழ், பெங்காலியில் உருவான படம் | கார்த்தி நடிக்கும் ‛வா வாத்தியார்' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தமிழகம் பக்கமே வரலை... ஆனாலும் தமிழில் ஹிட் | பக்தி மயத்தில் கோலிவுட் பார்ட்டிகள் | ‛‛2 ஆயிரம் சம்பளம் கேட்டேன், 4 லட்சம் கொடுத்தார் நட்டி'': சிங்கம்புலி நெகிழ்ச்சி |
கடந்த 15 வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் மம்முட்டி நடித்த பிக்-பி என்கிற கேங்ஸ்டர் படத்தை இயக்கியவர் இயக்குனர் அமல் நீரத். தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் மம்முட்டியை வைத்து பீஷ்ம பர்வம் என்கிற படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் மார்ச்-3ல் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில், இந்த படத்தில் இடம்பெறும் சில காட்சிகளை ரசிகர்கள் தங்கள் மொபைல்போனில் படம் பிடித்து அவற்றை சோசியல் மீடியாவில் பகிர்ந்து கொண்டு வருகின்றனர். இது இயக்குனர் அமல் நீரத்தை ரொம்பவே அப்செட் ஆக்கியுள்ளது.
உடனே இது குறித்து ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுக்கும் விதமாக, 'ரசிகர்கள் இந்த படத்தை தியேட்டருக்கு வந்து பார்த்து என்ஜாய் செய்து ரசியுங்கள், அதேசமயம் தயவுசெய்து யாரும் படக்காட்சிகளை மொபைல் போனில் பதிவு செய்வதோ அவற்றை சோசியல் மீடியாவில் பரப்புவதோ செய்ய வேண்டாம் என வேண்டுகோள் வைக்கிறேன்... கொரோனா தாக்கம் நிலவிய இந்த இரண்டு வருட காலத்தில் இந்த படத்தை எடுத்து முடிக்க நாங்கள் மிகப்பெரிய உழைப்பை கொடுத்திருக்கிறோம். தயவுசெய்து அதை வீணடித்து விட வேண்டாம்” என்று கேட்டுக் கொண்டுள்ளார்.