காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் | 3டியில் வெளியாகும் பான் இந்தியா சூப்பர் ஹீரோ படம் | பிளாஷ்பேக்: முதல் 'பார்ட் 2' படம் |
தெலுங்கில் நானிக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்த ஷயாம் சிங்க ராய் படம் கடந்த டிசம்பர் 24ம் தேதி வெளியானது. இந்த படத்தை அடுத்து திரிவிக்ரம் இயக்கத்தில் மகேஷ்பாபு நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு தங்கையாக சாய்பல்லவி நடிப்பதாக டோலிவுட்டில் கடந்த சில தினங்களாக ஒரு செய்தி பரவிக்கொண்டிருக்கிறது. ஆனால் அதையடுத்து மீடியாக்கள் சாய்பல்லவியை தொடர்பு கொண்டபோது, ஷ்யாம் சிங்க ராய் படத்திற்குப் பிறகு மாறுபட்ட பல கதைகளை கேட்டு வருவதாகவும், இன்னமும் அடுத்து நடிக்கும் படங்களை முடிவு செய்யவில்லை எனவும் தெரிவித்துள்ள சாய்பல்லவி, மகேஷ்பாபு படத்தில் அவருக்கு தங்கையாக தான் நடிப்பதாக வெளியான செய்தி உண்மையில்லை என்று அதற்கு ஒரு மறுப்பும் தெரிவித்திருக்கிறார்.