ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
கொரோனா மூன்றாவது அலையில் மீனா, த்ரிஷா, சத்யராஜ், அருண்விஜய், மகேஷ்பாபு, ஷெரின் உள்ளிட்ட பல நடிகர், நடிகைகள் பாதிக்கப்பட்டனர். அதேபோல, மலையாள பட இயக்குநர் ப்ரியதர்ஷனுக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
இந்தநிலையில், பிரபல மலையாள நடிகர் மம்முட்டி கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக மம்முட்டி கூறுகையில், ‛தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துக்கொண்ட போதிலும், நேற்று எனக்கு கோவிட் பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டது. லேசான காய்ச்சல் தவிர, நான் நன்றாக இருக்கிறேன். சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் அறிவுறுத்தல்களின்படி நான் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளேன். நீங்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டுகிறேன். எல்லா நேரங்களிலும் முகக்கவசம் அணிந்து கவனமாக இருங்கள்,' எனத் தெரிவித்துள்ளார்.