ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கருங்குழிபள்ளம் என்ற கிராமத்தில் மலையாள நடிகர் மம்முட்டி மற்றும் அவரது மகன் துல்கர் சல்மான் ஆகியோருக்கு சொந்தமான 40 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தை புறம்போக்கு நிலம் என்று கடந்த மார்ச் மாதம் நில நிர்வாக ஆணையர் உத்தரவு பிறப்பித்தார்.
இந்த உத்தரவினை எதிர்த்து மம்முட்டியும் அவரது குடும்பத்தினரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்கள் . அந்த மனுவில், கடந்த 2007ம் ஆண்டு தனியார் நிலம் என வகைப்படுத்தப்பட்ட நிலத்தை கழுவேலி புறம்போக்கு வகைப்படுத்தப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், இந்த நிலம் சம்பந்தமாக கடுமையான நடவடிக்கை எடுக்கக் கூடாது என ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மம்முட்டி தரப்பில், தங்கள் தரப்பு விளக்கத்தை கேட்காமலும் நிலத்தை மறு வகைப்படுத்தி உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக வாதிடப்பட்டது. அதை ஏற்று நீதிபதி அந்த நிலத்தை கழுவெலி புறம்போக்கு நிலமாக மறு வகைப்படுத்தி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார். அதோடு இந்த நிலம் சம்பந்தப்பட்ட விவகாரத்தை மீண்டும் நில நிர்வாக ஆணையருக்கு அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி 12 வாரங்களில் தகுந்த உத்தரவு பிறப்பிக்க பணி ஆணை பிறப்பித்தார்.