இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் | பிளாஷ்பேக் : எம்.எஸ்.பாஸ்கருக்கு விருது கிடைத்திருக்க வேண்டிய கதாபாத்திரங்கள் | மீண்டும் விசாரணைக்கு வருகிறது மான்வேட்டை வழக்கு | வசூலை குவிக்கும் இந்திய அனிமேஷன் படம் | சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்கும் குழந்தைகள் சினிமா | பார்க்கிங் படத்துக்கு 3 விருதுகள் : இயக்குனர், ஹீரோ, எம்.எஸ்.பாஸ்கர் நெகிழ்ச்சி | புது சாதனை படைக்குமா 'கூலி' டிரைலர் | கல்லீரல் பிரச்னையால் அவதிப்படும் தனுஷ் பட நடிகர் : கேபிஒய் பாலா ஒரு லட்சம் உதவி | ‛ஹிருதயம் லோபலா' பாடல் நீக்கம் ஏன் ? : கிங்டம் தயாரிப்பாளர் புது விளக்கம் |
கொரோனா முதல் அலை முடிந்து இரண்டாவது அலை துவங்கி மீண்டும் லாக் டவுன் போடப்படும் என திரையுலகில் பலரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அதனாலேயே இயக்குனர்கள் பலரும் விரைந்து படப்பிடிப்பு நடத்தி முடிக்கும் விதமான கதைகளுக்கு முன்னுரிமை தந்து உள்ளூர்களிலேயே படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர். அப்படி குறுகியகால தயாரிப்பாக உருவாகியுள்ள ஒரு படம் தான் மலையாளத்தில் குஞ்சாக்கோ போபன் நடித்துள்ள 'பகலும் பாதிராவும்'.
மலையாளத்தில் ராஜாதிராஜா, மாஸ்டர்பீஸ், ஷைலாக் என மம்முட்டி நடித்த படங்களையே தொடர்ந்து இயக்கிவந்த அவரது ஆஸ்தான இயக்குனர், அஜய் வாசுதேவ் இயக்கியுள்ள இந்தப்படத்தில் கர்ணன், ஜெய்பீம் படங்களில் கதாநாயகியாக நடித்த ரஜிஷா விஜயன் கதாநாயகியாக நடித்துள்ளார். த்ரில்லர் படமாக இது உருவாகியுள்ளது. கடந்த டிச-8ஆம் தேதி தொடங்கிய இந்தப்படத்தின் படப்பிடிப்பை வெறும் பத்தே நாட்களில் நடத்தி முடித்துள்ளார் இயக்குனர் அஜய் வாசுதேவ். ஆச்சர்யமான விஷயம் தான்.