ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
பிரமாண்டமான படங்களை எடுப்பது போலவே புரமோஷன் நிகழ்ச்சிகளிலும் பிரமாண்டம் காட்டும் பணியையும் செய்து வருகிறார் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜாமவுலி. தற்போது ராம்சரண், ஜூனியர் என்டிஆர், அஜய் தேவ்கனை வைத்து அவர் இயக்கியுள்ள ஆர்ஆர்ஆர் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் பரபரப்பாக இருக்கிறார். அந்தவகையில் சமீபத்தில் தென்னிந்தியா முழுவதும் படக்குழுவினருடன் சுற்றிய ராஜமவுலி இந்தப்படத்தின் ஹிந்தி வெளியீட்டிற்கான மாபெரும் புரமோஷன் நிகழ்ச்சியை மும்பையில் ஏற்பாடு செய்துள்ளார்.
இந்த நிகழ்வில் பிரமாண்டம் காட்ட தீர்மானித்துள்ள ராஜமவுலி, ஐதராபாத்தில் இருந்து கிட்டத்தட்ட 3000 ரசிகர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக மும்பை வருவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளார். இவர்கள் அனைவரும் ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண் ரசிகர்கள். இந்த மாபெரும் கூட்டத்தை கூட்டுவதன் மூலம் பாலிவுட்டில் ஆர்ஆர்ஆர் படத்திற்கான அதிர்வலைகளை ஏற்படுத்துவதற்கான ராஜமவுலியின் மாஸ்டர் பிளான் இது என்று சொல்கிறார்கள்.