ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் தெலுங்கில் உருவாகியுள்ள புஷ்பா படத்தின் முதல் பாகம் 'புஷ்பா ; தி ரைஸ்' என்கிற பெயரில் இன்று வெளியாகியுள்ளது. ராஷ்மிகா கதாநாயகியாக, பஹத் பாசில் வில்லனாக நடிக்க, சமந்தா ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் ஆடியுள்ளார். பான் இந்தியா ரிலீசாக வெளியிட திட்டமிடப்பட்டிருந்த இந்தப்படம் உலகெங்கிலும் இன்று வெளியானாலும் கூட கேரளாவில் இதன் மலையாள பதிப்பு இன்று வெளியாகவில்லை.
இதனால் கேரளாவில் உள்ள அல்லு அர்ஜுன் ரசிகர்கள் அதிர்ச்சியும் ஏமாற்றமும் அடைந்துள்ளனர். இந்நிலையில் இந்தப்படத்தின் ஒலிப்பதிவு பணிகளை பொறுப்பேற்றுள்ள ஆஸ்கர் விருது பெற்ற சவுண்ட் இஞ்சினியரான ரசூல் பூக்குட்டி, இந்தப்படம் தாமதமாவது குறித்து தனது சோஷியல் மீடியா பக்கத்தில் விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.
இதுபற்றி அவர் கூறும்போது, “இந்தப்படத்தின் ஒலிப்பதிவு பணிகளில் புதிய தொழில்நுட்பம் ஒன்றை பயன்படுத்தியுள்ளோம்.. ஆனால், இந்த சாப்ட்வேரில் ஏற்பட்ட எதிர்பாராத பிழை காரணமாக அதன் அவுட் எடுக்கும்போது நாங்கள் எதிர்பார்த்த தரத்தில் பிரின்ட் எடுக்க முடியவில்லை. அதனால் ரசிகர்களுக்கு மிகச்சிறந்த பிரிண்ட்டை கொடுக்க வேண்டும் என்பதால் தான் இந்த தாமதம் ஏற்பட்டுள்ளது. தற்போது பிரிண்ட்டுகள் தயாராகிக்கொண்டு இருக்கின்றன” என கூறியுள்ளார்.
இதனால் புஷ்பாவின் மலையாள பதிப்பு ஒருநாள் தாமதமாக நாளை (டிச-18) தான் வெளியாகும்.. என்றாலும், கேரள தியேட்டர்களில் இன்று புஷ்பா தமிழ்ப்பதிப்பினை திரையிட்டு படம் பார்க்க வந்த ரசிகர்களை ஒருவழியாக சமாளித்து வருகின்றனர்.




