தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் | கிங்டம் படத்திற்கு எதிர்ப்பு : நா.த.க.,வினர் முற்றுகை, கைது | மலையாளத்தில் அறிமுகமான கதிர் | பிளாஷ்பேக்: அம்பிகாவுடன் நெருக்கமாக நடித்த சிவகுமார் |
தென்னிந்திய மாநிலங்களில் தெலுங்கிற்கு அடுத்ததாக அல்லு அர்ஜுனுக்கு மிகப்பெரிய வரவேற்பு கொடுக்கும் ரசிகர்கள் கேரளாவில் தான் இருக்கின்றனர். சொல்லப்போனால் கேரளாவில் செல்வாக்கு பெற்ற ஒரே தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் தான். இந்த நிலையில் அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள புஷ்பா படத்தின் முதல் பாகம் இன்று (டிச-17) வெளியாகிறது. ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்துள்ள இந்த படத்தில் பஹத் பாசில் வில்லனாக போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் கேரளாவில் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் புஷ்பா படக்குழுவினர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் அல்லு அர்ஜுன் பேசும்போது இந்த படத்தின் மிக முக்கியமான ஆக்ஷன் காட்சி ஒன்றை கேரளாவில் படமாக்கத்தான் திட்டமிட்டிருந்தோம். ஆனால் கோவிட் காரணமாக எங்களால் இங்கே வந்து படப்பிடிப்பு நடத்த முடியாமல் போனது. இது படக்குழுவினரை விட எனக்கு ரொம்பவே வருத்தம் தந்தது என்று கூறியுள்ளார்.