நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்கு பாட்டு எழுதிய காளிமுத்து | பிளாஷ்பேக்: நாகேஸ்வர ராவின் தம்பியாக நடித்த நம்பியார் |
கதையம்சம் உள்ள படங்களாக தேர்ந்தெடுத்து தன்னை ஒரு நல்ல நடிகர் என நிரூபித்த மலையாள நடிகர் டொவினோ தாமஸ் சமீபகாலமாக ஆக்சன் படங்கள் பக்கம் தனது பார்வையைத் திருப்பியுள்ளார். அந்தவகையில் தற்போது மின்னல் முரளி என்கிற படத்தில் நடித்துள்ளார் டொவினோ தாமஸ். மலையாள சினிமா வரலாற்றிலேயே முதல் சூப்பர்மேன் படமாக இது உருவாகியுள்ளது.
ஏற்கனவே டொவினோ நடித்த 'கோதா' என்கிற படத்தை இயக்கிய பசில் ஜோசப் தான் இந்தப் படத்தையும் இயக்கியுள்ளார். நடிகார் குரு சோமசுந்தரம் இந்தப்படத்தில் முக்கிய கதாபத்திரத்தில் நடித்துள்ளார். கிறிதுமஸ் பண்டிகை ரிலீஸாக, வரும் டிச-24ஆம் தேதி இந்தப்படம் வெளியாகிறது. இந்தநிலையில் இந்தப்படத்தின் பிரீமியர் காட்சி திரையுலக பிரபலங்களுக்காக திரையிடப்பட்டது. இதில் மாளவிகா மோகனன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
சூப்பர்மேன் படம் என்பதால். வழக்கமான படங்களின் சண்டைக் காட்சிகள் போல மின்னல் முரளி படத்தில் இருக்கக் கூடாது என்பதற்காகவே பாஸ்ட் அண்ட் ப்யூரியஸ் உட்பட பல ஹாலிவுட் படங்களில் பணியாற்றிய பிரபல ஹாலிவுட் சண்டை பயிற்சியாளரான வ்லாட் ரிம்பர்க் என்பவரை அழைத்து வந்து இந்தப் படத்தின் சண்டைக் காட்சிகளை வடிவமைத்துள்ளார் இயக்குனர் பஷில் ஜோசப்.