காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | பிறமொழி சினிமா: 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் | 3டியில் வெளியாகும் பான் இந்தியா சூப்பர் ஹீரோ படம் | பிளாஷ்பேக்: முதல் 'பார்ட் 2' படம் |
தெலுங்கு திரையிலகின் பிரபல இயக்குனர்களில் ஒருவர் கிருஷ்ண வம்சி. நடிகை ரம்யா கிருஷ்ணனின் கணவரான இவர், தற்போது ரங்கா மார்த்தாண்டா என்கிற படத்தை இயக்கியுள்ளார். ரம்யா கிருஷ்ணன், பிரகாஷ்ராஜ், டாக்டர் ராஜசேகரின் மகள் ஷிவாத்மிகா ஆகியோர் நடித்துள்ள இந்தப்படம் ஒடிடியில் ரிலீஸாக இருக்கிறது. இதற்காக தற்போது போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்தப்படத்தில் முக்கியமான கதாபாத்திரம் ஒன்றுக்கோ அல்லது படத்தின் கதை சொல்லியாகவோ குரல் கொடுப்பதற்கு நடிகர் சிரஞ்சீவியிடம் பேசி அவரது சம்மதத்தை வாங்கி வைத்திருந்தார் கிருஷ்ண வம்சி.. ஆனால் சமீபத்தில் சிரஞ்சீவிக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றதை தொடர்ந்து அவர் ஒய்வு எடுத்து வருவதால் அவரை டப்பிங் பேச அழைக்கலாமா வேண்டாமா என்கிற குழப்பத்தில் இருந்துள்ளார் கிருஷ்ண வம்சி.. ஆனால் சிரஞ்சீவி தானாகவே அந்த விஷயத்தை ஞாபகப்படுத்தியதோடு சொன்னபடி வந்து டப்பிங்கு பேசி கொடுத்துள்ளார். அன்னைய்யாவின் அன்புக்கு ஈடு இல்லை என சிரஞ்சீவியின் இந்த செயல் பற்றி சோஷியல் மீடியாவில் உருகியுள்ளார் கிருஷ்ண வம்சி.