பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
படம் : அந்நியன்
வெளியான ஆண்டு : 2005
நடிகர்கள் : விக்ரம், சதா, விவேக் பிரகாஷ்ராஜ், நாசர்
இயக்கம் : ஷங்கர்
தயாரிப்பு : ஆஸ்கர் வி.ரவிச்சந்திரன்
குடிமக்களாகிய நாம், சட்டத்தை மதிக்கிறோமா என்ற கேள்விக்கு, திரைக்கதை அமைத்து இயக்கியிருந்தார், ஷங்கர். அது தான், அந்நியன்! சட்டத்தை மீறுவோரை, ஹிந்து வேதங்களில் ஒன்றான, கருட புராணத்தில் விவரிக்கப்பட்டுள்ள தண்டனைகளை பயன்படுத்தி கொல்கிறார், விக்ரம். ஷங்கரின் எண்ணத்தில் இருந்த படத்தை, தன் தோள் மீது சுமந்தது, நடிகர் விக்ரம் தான்.
'மல்டிபிள் பெர்சனாலிட்டி டிசார்டர்' பாதிப்புக்கு உள்ளானவராக மிரட்டியிருந்தார். அப்பாவி அம்பி, காதல் மன்னன் ரெமோ மற்றும் கொலைகார அந்நியன் என, மூன்று அவதாரங்களில், அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். பிரகாஷ்ராஜின் நடிப்பும் பாராட்டப்பட்டது.
கதை, திரைக்கதையில் ஷங்கருக்கு பக்கபலமாக இருந்த எழுத்தாளர் சுஜாதா, வசனத்தில் தன் முத்திரையை அழுத்தமாக பதித்தார். 'ஐந்து பைசா திருடினா தப்பா...' என்ற வசனம் வெகு பிரபலம். இப்படம் தெலுங்கு, ஹிந்தி மொழிகளில், 'டப்பிங்' செய்யப்பட்டு வெளியானது. பிரெஞ்சு மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு, பிரான்சில் திரையிடப்பட்ட முதலாவது இந்திய திரைப்படம் என்ற பெருமையையும், அந்நியன் பெற்றது.
பீட்டர் ஹெய்னின் சண்டை காட்சிகள் மெய்சிலிர்க்க வைத்தது. குறிப்பாக, 'டைம் ப்ரீஸ்' யுக்தியை பயன்படுத்தி எடுக்கப்பட்ட கராத்தே பள்ளி சண்டைக் காட்சி, ரசிகர்களை வாய் பிளந்து பார்க்க வைத்தது.
பாடல் காட்சிக்காக, ஊர்களுக்கு வர்ணம் தீட்டியது, பல கி.மீ., தார் சாலையை பட்டுச்சேலையாக மாற்றியது, மலைகளில் படம் வரைந்தது என, தன் வழக்கமான பிரமாண்டத்தை பாடல்களிலும் காட்டியிருந்தார், ஷங்கர். ஹாரிஸ் ஜெயராஜின் பாடல்களும், பின்னணி இசையும், இப்படத்திற்கு வலுசேர்த்தது.
மனதிற்கு நெருக்கமானான், அந்நியன்!