ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
படம் : கஜினி
வெளியான ஆண்டு : 2005
நடிகர்கள் : சூர்யா, அசின், நயன்தாரா
இயக்கம் : ஏ.ஆர்.முருகதாஸ்
தயாரிப்பு : சேலம் ஏ.சந்திரசேகர்
தீனா, ரமணா என, அடுத்தடுத்து ஹிட் படங்கள் கொடுத்த, இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், இம்முறை கஜினி என களமிறங்கி, வெற்றி பெற்றார். ஹாலிவுட் படங்களான மெமென்டோவில் இருந்து, 'மெமரி லாஸ்' கதையையும்; ஹாப்பி கோ லவ்லி - 1951 படத்தில் இருந்து, காதல் காட்சிகளையும் எடுத்து, 'மிக்ஸ்' செய்து, கஜினி எனக் கொடுத்திருந்தார், ஏ.ஆர்.முருகதாஸ்.
வில்லனால், காதலியை பறிகொடுத்து, 'ஷார்ட் டைம் மெமரி லாஸ்' என்ற பாதிப்பிற்கு ஆளாகிறார், சூர்யா. அவருக்கு, எந்தவொரு சம்பவமும், அடுத்த, 15 நிமிடங்கள் தான் நினைவில் நிற்கும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் அவன், வில்லனை எப்படி ஜெயித்தான் என்பது தான் திரைக்கதை.
மொட்டைத் தலை, முரட்டு வேகம் என மிரட்டினார், சூர்யா. தொழிலதிபர் சஞ்சய் ராமசாமியாக, அவ்வளவு அழகாகவும் இருந்தார். சூர்யா - அசின் காதல் காட்சிகள், பெரும் வரவேற்பை பெற்றன. அசின் பொய் சொல்லும் போது தான், எவ்வளவு அழகு!
நயன்தாரா இப்படத்தில் இருக்கிறார்; அவ்வளவு தான். வில்லன் பிரதாப் சிங், அதகளம் செய்திருந்தார். அதிலும், கிளைமாக்ஸ் சண்டைக் காட்சியில் டபுள் ரோலில் வந்து பிரமிக்க வைத்தார். ஆர்.டி.ராஜசேகரின் ஒளிப்பதிவு, மிரட்டியது. ஆக் ஷன் காட்சிகளில், அனல் கூட்டியது.
ஹாரிஸ் ஜெயராஜின் இசையில், 'ஒரு மாலை இளவெயில் நேரம், சுட்டும் விழிச்சுடரே, ரங்கோலா கோலா...' உள்ளிட்ட பாடல்கள் பரவசப்படுத்தின. இப்படத்தை அதே பெயரில், அமீர் கான் நடிப்பில், 2008ல் ஹிந்தியில் இயக்கினார், ஏ.ஆர்.முருகதாஸ். இதற்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்தார். பாடல்களும், படமும், 'சூப்பர் டூப்பர் ஹிட்' அடித்தன.
நம் நாட்டில் சூப்பர் ஹிட் அடித்தாலும், கஜினி வெளிநாட்டு சரக்கு தான்!