துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் |
படம் : துாள்
வெளியான ஆண்டு : 2003
நடிகர்கள் : விக்ரம், ஜோதிகா, ரீமாசென், விவேக், சாயாஜி ஷிண்டே
இயக்கம் : தரணி
தயாரிப்பு : ஸ்ரீசூர்யா மூவீஸ்
தில் கொடுத்த வெற்றியால், துாள் எனக் களமிறங்கியது, நடிகர் விக்ரம் - இயக்குனர் தரணி கூட்டணி. ஆக் ஷன் - மசாலா படமான துாள், பட்டையை கிளப்பியது! கடந்த, 2003 பொங்கலுக்கு வெளியான துாள், 'ப்ளாக் பஸ்டர் ஹிட்' அடித்தது.
கிராமத்தில் இருக்கும் ரசாயன தொழிற்சாலையின் கழிவுகள், ஆற்றில் கலப்பதை தடுக்க வேண்டும் என்ற கோரிக்கையோடு விக்ரம், ஜோதிகா, பரவை முனியம்மா குழு, சென்னைக்கு சென்று அமைச்சர் சாயாஜி ஷிண்டேவை சந்திக்கிறது. அங்கு உள்ளூர் தாதாவான, தெலுங்கானா சகுந்தலாவுடன், விக்ரமுக்கு மோதல் ஏற்படுகிறது. தெலுங்கானா சகுந்தலாவின் பின்புலத்தில் இருப்பவர், சாயாஜி ஷிண்டே என தெரியவர, விக்ரம் எடுக்கும் புத்திசாலித்தனமான ஆக் ஷன் தான், துாள்.
ஆறுமுகம் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கவிருந்தவர் விஜய். கால்ஷீட் பிரச்னை காரணமாக, அவரால் நடிக்க முடியவில்லை. அதன்பின் விக்ரம் நடித்தார். 'சொர்ணாக்கா' என்ற ரவுடியாக, தெலுங்கானா சகுந்தலா மிரட்டியிருந்தார். அதன்பின், சொர்ணாக்கா என்ற பெயர் தமிழகம் எங்கும் வெகு பிரபலமானது.
நாட்டுப்புற பாடகி பரவை முனியம்மா, இப்படத்தில் நடிகையாக அறிமுகமானார். சண்டை காட்சியுடன் அமைந்த, 'மதுரை வீரன் தானே...' பாடல் வெகுவாக ரசிக்கப்பட்டது. கவர்ச்சிக்கு ரீமாசென்; காமெடிக்கு விவேக் என உப்பு, காரம், மசாலா அனைத்தும் சரியான விகிதத்தில், இப்படத்தில் கலந்திருந்தது.
வித்யாசாகர் இசையில், அனைத்து பாடல்களும் தாளம் போட செய்தன. இப்படம் தெலுங்கு, சிங்களம், பஞ்சாபி, பெங்காலி மொழிகளில், 'ரீமேக்' செய்யப்பட்டது. மலையாளம் மற்றும் ஹிந்தியில், 'டப்பிங்' செய்து வெளியிடப்பட்டது.