'3 பிஎச்கே' முதல் 'தம்முடு' வரை: இந்த வார ஓடிடி ரிலீஸ் என்னென்ன? | ரிஷப் ஷெட்டியின் புதிய படத்தின் அப்டேட்! | சென்னை கல்லூரி சாலை நடிகர் ஜெய்சங்கர் சாலை ஆகிறது | மீண்டும் இணையும் பாண்டிராஜ், விஜய் சேதுபதி கூட்டணி! | சரியான நேரம் அமையும் போது சூர்யாவை வைத்து படம் இயக்குவேன் -லோகேஷ் கனகராஜ்! | புதுமுக இயக்குனரை ஆச்சரியப்படுத்திய விஜய்! - இயக்குனர் பாபு விஜய் | விஜய் உட்கட்சி பிரச்னை: உதயாவின் 'அக்யூஸ்ட்' படத்தில் இடம் பெறுகிறதா? | போகியை புறக்கணித்தார் சுவாசிகா: பழசை மறப்பது சரியா? | ஒரே படத்தில் இரண்டு புதுமுகங்கள் அறிமுகம் | துல்கர் இருப்பதால் நான் தனிமையை உணரவில்லை: கல்யாணி |
படம் : பார்த்திபன் கனவு
வெளியான ஆண்டு : 2003
நடிகர்கள் : ஸ்ரீகாந்த், சினேகா, மணிவண்ணன், விவேக்
இயக்கம் : கரு.பழனியப்பன்
தயாரிப்பு : சத்யஜோதி பிலிம்ஸ்
கல்கி எழுதிய, 'பார்த்திபன் கனவு' நாவல், 1960ல் அதே பெயரில் படமாக வெளியானது. 2003ல், அதே தலைப்பில் படம் வெளியானது; ஆனால், கதை வேறு! கரு.பழனியப்பனின் முதல் படம் இது. அவர், திரையில் உலவ செய்த பெண் கதாபாத்திரங்கள், தனித்துவம் ஓங்கி தென்பட்டனர்.
ஸ்ரீகாந்த், சினேகாவை கண்டதும் காதலில் விழுகிறார். அதே நேரம், ஸ்ரீகாந்திற்கு, அவரது பெற்றோர் பார்த்திருக்கும் பெண்ணாக, சினேகா இருக்கிறார். இதனால் மகிழ்ச்சியில் திருமணம் செய்து கொள்ளும் ஸ்ரீகாந்திற்கு, தான் காதலித்த பெண் வேறு; மனைவியாக உள்ள பெண் வேறு என்ற உண்மை தெரிய வருகிறது. உருவ ஒற்றுமையால் நடந்த குழப்பத்தால், ஸ்ரீகாந்த் தவிக்கிறார். அதன் முடிவு என்ன என்பதை, சுவாரஸ்யமாக திரைக்கதையாக்கி இருந்தார், கரு.பழனியப்பன்.
சத்யா, ஜனனி என, இரட்டை கதாபாத்திரத்தில் சினேகா அற்புதமாக நடித்திருந்தார். இக்கதாபாத்திரத்தில் நடிக்கவிருந்தவர், ஜோதிகா. அவரின் கால்ஷீட் கிடைக்காததால், சினேகா நடித்தார். இப்படம், தமிழக அரசின், ஏழு விருதுகளை பெற்றது.
வித்யாசாகர் இசையில், 'கனாக் கண்டேனடி, தீராத தம் வேண்டும், பக் பக் நெஞ்சில் மாடப்புறா, என்ன தவம் செய்தனை, ஆலங்குயில், வாடி மச்சினியே...' பாடல்கள் ரசிக்க வைத்தன. ஒவ்வொரு வார்த்தைக்கும், பாடல் மூலம் விளக்கம்; மூன்று கால கட்டத்தில் நிகழும் நடனம் என, பாடல் படமாக்கப்பட்ட விதமும் வெகுவாக ரசிக்கப்பட்டது.
விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்ற இப்படம், அம்மாயி பாகுந்தி என, தெலுங்கில், 'ரீமேக்' செய்யப்பட்டது. மஞ்சு பெய்யும் முன்பே எனும் பெயரில், மலையாளத்தில், மொழிமாற்றம் செய்யப்பட்டது.
வாழ்க்கையை புரிந்து கொள்ள செய்தது, பார்த்திபன் கனவு!