தமிழ் புத்தாண்டு தினத்தில் சூர்யாவுடன் மோதும் விஷால்! | என் படங்களுக்காக ரசிகர்களை எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்க வைப்பேன்! - விஷ்ணு விஷால் | விளையாட்டால் நிகழும் பிரச்னையே ‛கேம்' : சொல்கிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத் | நெல் விவசாயத்தில் இறங்கிய நயன்தாரா பட இயக்குனர் | தெலுங்கில் முதல் முறையாக நுழைந்த அக்ஷய் கன்னா ; சுக்ராச்சாரியார் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் | கன்னட நடிகர் தர்ஷனுக்கு தனிமை சிறை ஏன்? நீதிமன்றத்தில் மனு தாக்கல் | 'திரிஷ்யம் 3' ; ஜீத்து ஜோசப் வெளியிட்ட முதல் புகைப்படம் | ஜீவாவின் 'தலைவர் தம்பி தலைமையில்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | காதலில் கரைபவர் வெகு சிலரே : தனுஷின் ‛தேரே இஷ்க் மே' டீசர் வெளியீடு | கமல் பிறந்தநாள் : ரீ-ரிலீஸாகும் ‛நாயகன்' |
ஆப்கானிஸ்தான் நாடு இப்போது தாலிபான்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்திருக்கிறது. அங்குள்ள பெண்களை அடிமைகள் போன்று நடத்த ஆரம்பித்திருக்கிறார்கள். இளம் பெண்களை கட்டாய திருமணம் செய்து வருகிறார்கள். தலிபான்கள் ஆட்சி மீண்டும் அமைந்திருப்பதை இந்தியாவில் உள்ள சில முஸ்லிம் பிரிவுகள் கொண்டாடி வருகிறது. இது தொடர்பாக அவர்கள் சமூக வலைத்தளங்களில் தலிபான்களுக்கு ஆதரவான கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.
இதனை பிரபல பாலிவுட் நடிகர் நஸ்ருதீன் ஷா கண்டித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் பேசி இருப்பதாவது: ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆட்சி மீண்டும் அமைவது ஒட்டுமொத்த உலகையே கவலைஅடையச் செய்துள்ளது. அப்படி இருக்கும்போது, அந்தக் காட்டுமிராண்டிகளின் வெற்றியை இந்திய முஸ்லிம்களில் ஒரு பகுதியினர் கொண்டாடுவது மிகவும் ஆபத்தானது.
தலிபான்களின் வெற்றியை கொண்டாடும் இந்திய முஸ்லிம்கள், நமது மதத்தை சீர்படுத்த வேண்டுமா அல்லது பழமையான காட்டுமிராண்டிதனத்துடன் வாழ வேண்டுமா என்று சிந்திக்க வேண்டும். உலகின் பல்வேறு நாடுகளில் பின்பற்றப்படும் இஸ்லாம் மதத்துக்கும், இந்தியாவில் பின்பற்றப்படும் இஸ்லாம் மதத்துக்கும் பல வேறுபாடுகள் உள்ளன. இதனை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.