அஸ்வத் மாரிமுத்துவிற்கு விண்ணப்பித்த 15 ஆயிரம் உதவி இயக்குனர்கள்! | கவுதம் ராம் கார்த்திக் 19வது படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ''இப்போ ரிஸ்க் எடுக்கலைனா.. எப்பவும் இல்ல'': சினிமா என்ட்ரி குறித்து மனம்திறந்த காவ்யா அறிவுமணி | த்ரிவிக்ரம் இயக்கத்தில் தனுஷ்? | குட் பேட் அக்லி - முன்பதிவு நிலவரம் என்ன? | அஜித், தனுஷ் கூட்டணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது! | 'ரெட்ட தல' படத்தின் புதிய அப்டேட்! | ராஜமவுலியுடன் இணையாதது ஏன்? சிரஞ்சீவி விளக்கம் | சென்னையை விட்டு சென்றது ஏன்? சசிகுமார் விளக்கம் | தமிழிலும் வெளியாகும் 'இத்திக்கர கொம்பன்' |
சமீபத்தில் வெளியான மலையாள படமான மாலிக் படத்தை இயக்கியவர் மகேஷ் நாராயணன். அவரது முதல் திரைப்படமான டேக் ஆப், இந்திய மருத்துவ செவிலியர்கள் 2014 ஆம் ஆண்டில் ஈராக் கலவரத்தில் மாட்டிக்கொண்டதை, விவரிக்கும் படைப்பாக அமைந்திருந்தது. இந்திரைப்படம் அவருக்கு உலகளவில் பெரும் அங்கீகாரத்தையும் பல விருதுகளையும் பெற்று தந்தது. மேலும் இந்தியளவிலும் உலகளவிலும் நிறைய திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டது.
அவரது இரண்டாவது திரைபடமான சி யூ சூன் ஓடிடி தளத்தில் அதிக பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்தது. தேவர்மகன் 2வது பாகத்தை இவர் இயக்க இருப்பதாக சமீபத்தில் தகவல்கள் வெளியானது. மகேஷ் நாராயணன் ஒரு ஒளிப்பதிவாளர், எடிட்டர் மற்றும் திரைக்கதை எழுத்தாளராக 50 க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றியுள்ளார்.
தற்போது மகேஷ் நாராயணன் பாலிவுட்டில் கால் பதிக்கிறார். படத்திற்கு பான்ந்தோம் ஹாஸ்பிட்டல் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. புகழ்பெற்ற எழுத்தாளர் ஜோசி ஜோசப் இந்தியாவின் சுகாதாரத்தை பற்றி ஆய்வு செய்து எழுதிய கதையை அடிப்படையாக கொண்டு இந்த படம் தயாராகிறது. இதனை தல்வார், ராஸி, பாஹ ஹோ படங்களை தயாரித்த ப்ரீத்தி ஷஹானி தயாரிக்கிறார்.
படம் குறித்து இயக்குநர் மகேஷ் நாராயணன் கூறியதாவது: இந்திய சுகாதாரத் துறையில் நிகழ்ந்துள்ள ஊழல் சம்பவங்களை அடைப்படையாக கொண்டிருக்கும் இக்கதையை கேட்டதுமே, என்னை வெகுவாக ஈர்த்தது. ப்ரீதி ஷஹானி ஒரு தயாரிப்பாளராக தரமான திரைப்படங்களை தொடர்ந்து வழங்கி வருகிறார், அவருடன் பணியாற்றுவதில் மகிழ்ச்சி. அவர்களின் மொழியில் எனது முதல் இந்திப் படத்தை இயக்க, நான் ஆவலுடன் காத்திருக்கிறேன். என்றார்.