சினிமாவிற்கு மொழி கிடையாது, தமிழிலும் நடிக்க ஆசைப்படும் பாக்யஸ்ரீ போர்ஸ் | சட்டப்படி பிரிந்தனர் : ஜிவி பிரகாஷ், சைந்தவிக்கு விவாகரத்து வழங்கியது நீதிமன்றம் | ஓவியா எங்கே? ஓவியாவுக்கு என்னாச்சு? | பிரபாஸ் படத்தில் இணையும் பிரேமம் பட நாயகி | இட்லி கடை, காந்தாரா 2 ஜெயிப்பது யார்? | இறுதிகட்ட படப்பிடிப்பில் பராசக்தி | கைவிடப்பட்ட சுந்தர்.சி, கார்த்தி படம் | ஒரே படத்தில் 3 ஹீரோயின்கள் | தேவயானி அடித்தால் எப்படி இருக்கும் தெரியுமா? : ராஜகுமாரன் சொன்ன அதிர்ச்சி தகவல் | நான் நடிகர் ஆன கதை : ரஞ்சித் சொன்ன பிளாஷ்பேக் |
அதிரடியான கருத்துக்களை துணிச்சலாக சொல்வதற்கு தயங்காதவர் பாலிவுட் நடிகை கங்கனா ரணவத் கடந்த வருடம் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்து கொண்டு இறந்த சமயத்தில், சுஷாந்தின் வாய்ப்புகள் ஒவ்வொன்றாக பறிக்கப்பட்டு அவர் மன அழுத்தத்திற்கு ஆளானதற்கு காரணம், பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் கரண் ஜோஹர் மற்றும் அவரைப்போன்ற வாரிசு நடிகர்கள் தான் காரணம் என பகிரங்கமாக குற்றம் சாட்டினார். குறிப்பாக கரண் ஜோஹரை நேபோடிசம் கிங் என்று குறிப்பிட்டார்.
இந்த நிலையில் சமீபத்தில் பாலிவுட்டில் கார்கில் வீரர் விக்ரம் மல்ஹோத்ரா வாழ்க்கை பற்றிய படமாக ஷெர்ஷா என்கிற படம் வெளியாகி இருந்தது. பலரின் பாராட்டுக்களை பெற்ற இந்தப்படம் கங்கனாவின் பாராட்டையும் பெற தவறவில்லை. ஆனால் இதில் ஆச்சரியம் என்னவென்றால் இந்த படத்தை தயாரித்தது கங்கனாவின் பரம எதிரியான கரண் ஜோஹர் தான், அவர் மீதான தனது எதிர்ப்பு ஒரு பக்கம் இருந்தாலும் நல்ல படைப்புகளை பாராட்ட வேண்டும் என்கிற நோக்கில் கங்கனா இந்த படத்திற்கு தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார் என்றே தெரிகிறது.