இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவரான ராஜ் குந்த்ரா கடந்த ஜூன் மாதம் ஆபாச படங்கள் தயாரித்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது ஆபாச படமெடுப்பதில் ஷில்பா ஷெட்டிக்கும் தொடர்பு இருப்பதாக செய்தி வெளியாக அது தொடர்பாக வழக்கு தொடர்ந்தார் ஷில்பா ஷெட்டி.
இப்படியான நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராமில் நடந்த சம்பவங்கள் குறித்து ஒரு பதிவு போட்டுள்ளார் ஷில்பா. அதில், சில தவறுகளை செய்யாமல் வாழ்க்கை சுவராஸ்யமாக இருக்காது. ஆனால் அந்த தவறுகள் பிறரை காயப்படுத்தாத அபாயகரமான தவறுகளாக இருக்காது என்று நம்புவோம். ஆனால் தவறுகள் செய்யப்போகிறேன். அதிலிருந்து என்னை மன்னித்து, அந்த தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்வேன் என்று தெரிவித்துள்ள ஷில்பா ஷெட்டி, நான் தவறு செய்து விட்டேன். ஆனாலும் பரவாயில்லை என்றும் பதிவிட்டுள்ளார்.