23 வருடங்களுக்கு பிறகு பிரசாந்த் - ஹரி கூட்டணி -அதிகாரப்பூர்வ அறிவிப்பு | விஜய்யின் ‛லியோ' பட சாதனையை முறியடித்த அஜித்தின் ‛குட் பேட் அக்லி' டிரைலர்! | பொன்ராம் இயக்கத்தில் சண்முக பாண்டியன் நடிக்கும் ‛கொம்பு சீவி' | சத்யராஜ் பாணியில் கதை தேடும் ‛மர்மர்' நாயகன் தேவ்ராஜ்! | தமிழகத்திற்காக மற்ற மாநிலங்களிலும் ‛குட் பேட் அக்லி' படத்தின் அதிகாலை காட்சி ரத்து! | ரோமியோக்களால் மொபைல் நம்பரை மாற்றிய நடிகை | விரும்பிய கல்லூரியில் சேர குத்துச்சண்டை பழகிய பிரேமலு ஹீரோ | புஷ்பா 2 சம்பவம் எதிரொலி ; ஆர்யா-2 ரீ ரிலீஸான தியேட்டர்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு | சன்னி தியோலை நேரில் சந்தித்த பிரபாஸ்: ‛ஜாட்' படத்திற்கு வாழ்த்து | பிரித்விராஜ்க்கு வருமான வரித்துறை நோட்டீஸ் ; எம்புரான் படம் காரணம் அல்ல |
இந்தி சினிமாவின் முன்னணி நடிகைகளுள் ஒருவர் ஷில்பா ஷெட்டி. இந்தியில் முன்னணி நடிகர்களுடன் எராளமான படங்களில் நடித்துள்ள ஷில்பா ஷெட்டி, தமிழில் பிரபுதேவா உடன் மிஸ்டர் ரோமியோ, விஜய்யுடன் குஷி படத்தில் மேக்கோரீனா என்ற பாடலுக்கு நடனமாடினார். இதனால் தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமானார்.
ஷில்பா ஷெட்டி கடந்த 2019ஆம் ஆண்டு தொழில் அதிபர் ராஜ் குந்த்ராவை திருமணம் செய்தார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் ஆபாச படங்களை தயாரித்து வெளியிட்ட வழக்கில் கடந்த மாதம் 19 ஆம் தேதி தொழில் அதிபர் ராஜ் குந்த்ரா மும்பை போலீசாரால் திடீரென கைது செய்யப்பட்டார். இது பாலிவுட் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் ராஜ் குந்த்ராவுக்கு எதிராக ஆதாரங்கள் வலுவாக இருப்பதால் அவருக்கு தண்டனை கிடைப்பது உறுதி என்று கூறப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ராஜ்குந்த்ராவுடன் தான் சேர்ந்து வசித்து வரும் வீட்டில் இருந்து வெளியேற, ஷில்பா ஷெட்டி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் ராஜ் குந்த்ராவை பிரிந்து, அவர் தொடர்பான பிரச்சினைகள் எதுவும் இல்லாமல், புது வாழ்க்கையை துவங்க நடிகை ஷில்பா ஷெட்டி விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து நடிகை ஷில்பா ஷெட்டியிடம் இருந்து விரைவில் அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.
ராஜ் குந்திராவின் ஆபாச பட விவகாரத்தில் ஷில்பா ஷெட்டிக்கு தொடர்பு இருக்கிறதா என்று போலீசார் விசாரணை நடத்தினர். இதனால் அவர் மனம் உடைந்து கணவரை கண்டித்து கண்ணீர்விட்டு அழுததாக கூறப்பட்டது. கணவர் மீதுள்ள கோபத்தில் சிறையில் சென்று அவரை பார்க்காமல் ஒதுக்கி விட்டதாகவும் பேசுகிறார்கள். ராஜ் குந்த்ராவை அவரது வீட்டிற்கு அழைத்து சென்ற போலீசார் வீட்டிலேயும் விசாரணை நடத்தினர். அப்போது ஷில்பா ஷெட்டி குடும்ப மானமே போய்விட்டது என்றும் என்ன குறைச்சலாக இருக்கிறது என்றும் இப்படி சம்பாதிக்க வேண்டிய அவசியம் என்ன என்று கேட்டும் கணவர் ராஜ் குந்த்ராவிடம் கதறி அழுததாகவும் தகவல் வெளியானது. கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட இந்த வாக்குவாதத்தில் உடன் சென்ற போலீசார் தலையிட்டு தீர்த்து வைத்ததாகவும் கூறப்பட்டது.
சில நாட்களுக்கு முன்னரே ஷில்பா ஷெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தவறு செய்து விட்டதாக பதிவு வெளியிட்டு இருக்கிறார். அந்த பதிவில் ஒரு புத்தகத்தில் இடம்பெற்றுள்ள, “தவறுகள் செய்யாத வாழ்க்கையில் சுவாரஸ்யம் இருக்காது. தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்வேன் என்ற வாசகத்தையும் வெளியிட்டு இருக்கிறார். ராஜ்குந்த்ராவை திருமணம் செய்ததைத்தான் தவறு செய்துவிட்டேன் என்று ஷில்பா ஷெட்டி சொல்கிறார் என்று சமூகவலைத்தளத்தில் ரசிகர்கள் பேசி வருகின்றனர்.
கணவர் கைது செய்யப்பட்டதால் மன வேதனையில் இருந்த ஷில்பா ஷெட்டி கடந்த 3 வாரங்களாக தான் பங்கேற்ற சூப்பர் டான்சர் நிகழ்ச்சியில் பங்கேற்காமல் இருந்தார். இந்நிலையில் கடந்த வாரம் முதல் மீண்டும் நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார். படப்பிடிப்பு தளத்தில் எடுத்த படங்களையும் தனது இணைய பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். ராஜ் குந்த்ராவின் பிரச்சனை இப்போது தீராது. வாரா வாராம் இந்த விவகாரம் பெரிதாகி கொண்டேதான் செல்வதால் ஷில்பா ஷெட்டி தனது கணவர் செய்த தவறுகள் மூலம் சம்பாதித்த அனைத்து பணத்திலும் இருந்து விலகி இருக்க முடிவு செய்துள்ளதாகவும் அவருடைய நண்பர் கூறியுள்ளார். 40 வயதைத் தாண்டிய ஷில்பா ஷெட்டி இன்னமும் இளம் நடிகைகளுக்கு போட்டி தரும் வகையில் உடலை கட்டுக்கோப்பாக வைத்துள்ளார். எனவே மீண்டும் நடிப்பில் பிசியாக திட்டமிட்டு அதற்காக சில நண்பர்களிடம் கோரிக்கையும் வைத்துள்ளார் என்கிறார்கள்.