பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் | ரஜினி திடீர் இமயமலை பயணம் | ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி | பிளாஷ்பேக்: 400 படங்களில் நடித்த கோவை செந்தில் | 300 கோடி வசூல் சாதனை புரிந்த 'லோகா' | பிளாஷ்பேக்: முதல் நட்சத்திர ஒளிப்பதிவாளர் | நான்கு நாட்களில் 300 கோடி வசூலைக் கடந்த 'காந்தாரா சாப்டர் 1' | ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! |
நடிகர் அமிதாப்பச்சனின் மகனும், நடிகை ஐஸ்வர்யா ராயின் கணவருமான அபிஷேக் பச்சன் மும்பையில் 2014ம் ஆண்டு வாங்கிய சுமார் 7000 சதுர அடி கொண்ட அடுக்குமாடி குடியிருப்பை சில தினங்களுக்கு முன்பு விற்றுள்ளார்.
மும்பையில் வொர்லி பகுதியில் ஓபராய் 360 மேற்கு என்ற பெயரில் டவர் ஏ, டவர் பி என்ற இரண்டு அடுக்குமாடி கட்டிடங்கள் 2011ம் ஆண்டு கட்ட ஆரம்பிக்கப்பட்டது. டவர் ஏ என்பது 52 மாடிகளைக் கொண்ட லக்சுரி ஹோட்டல். டவர் பி என்பது 90 மாடிகளைக் கொண்ட குடியிருப்பு. இதன் உயரம் 360 மீட்டர் என்பதால் தான் குடியிருப்பிற்கு ஓபராய் 360 மேற்கு எனப் பெயரிட்டார்கள். அரபிக்கடலை நோக்கி மேற்குப் பக்கம் பார்த்தபடி அனைத்து வாசற்படிகளும் இருக்குமாம். இந்தக் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டால் இந்தியாவிலேயே உயரமான கட்டிடம் எனப் பெயர் பெறும். இந்த ஆண்டுக்குள் கட்டி முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டவர் பி கட்டிடத்தின் 32வது மாடியில் 4 கார் பார்க்கிங் வசதியுடன் 2014ம் ஆண்டு 41 கோடி ரூபாய்க்கு வாங்கிய குடியிருப்பை அபிஷேக் பச்சன் தற்போது 45 கோடிக்கு விற்றுள்ளதாக பாலிவுட் வெப்சைட்டுகள் செய்தி வெளியிட்டுள்ளன. அவர் விற்றதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை.
அதே குடியிருப்பில் அக்ஷய்குமார் 52 கோடிக்கும், ஷாகித் கபூர் 56 கோடிக்கும் வீட்டை வாங்கியிருக்கிறார்களாம். ராணி முகர்ஜி 7 கோடிக்கும், திஷா பதானி 6 கோடிக்கும் வாங்கியிருக்கிறார்களாம்.