2025ல் தமிழ் சினிமா: இப்படியே போய்விடுமா ??? | இந்த வாரமும் இத்தனை படங்கள் வெளியீடா... தாங்குமா...? | தமனின் கிரிக்கெட்டைப் பாராட்டிய சச்சின் டெண்டுல்கர் | 300 கோடியைக் கடந்த 3வது படம் 'ஓஜி' | பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் | ரஜினி திடீர் இமயமலை பயணம் | ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி | பிளாஷ்பேக்: 400 படங்களில் நடித்த கோவை செந்தில் | 300 கோடி வசூல் சாதனை புரிந்த 'லோகா' | பிளாஷ்பேக்: முதல் நட்சத்திர ஒளிப்பதிவாளர் |
டோக்கியோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலிலில் தங்கம் வென்று தங்க மகனாக திரும்பி இருக்கிறார் நீரஜ் சோப்ரா. தற்போது அவரை பற்றிய செய்திகள் அதிகம் வந்து கொண்டிருக்கிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மீடியாக்களுக்கு பேட்டி அளித்த நீரஜ் சோப்ரா, தனது பயோபிக் சினிமாவாக எடுக்கப்பட்டால் அதில் எனது கேரக்டரில் அக்ஷய் குமாரோ, ரந்தீப் ஹூடாவோ நடிக்க வேண்டும். ஆனால் ஒய்வு பெற்ற பிறகு பயோபிக்க எடுப்பதுதான் பொருத்தமாக இருக்கும் என்று கூறியிருந்தார்.
நீரஜ் சோப்ரா தங்கம் வென்றதை தொடர்ந்து அவரை பாராட்டிய அக்ஷய்குமார், "100 கோடி இந்தியர்களின் ஆனந்த கண்ணீருக்கு நீங்கள் தான் பொறுப்பு" என்று குறிப்பிட்டிருந்தார். இதை தொடர்ந்து நீரஜ் சோப்ராவின் பயோபிக்கில் நீங்கள் நடிப்பீர்களா என்று நெட்டிசன்கள் கேட்டு வந்தார்கள்.
இதற்கு பதிலளித்துள்ள அக்ஷய்குமார், நான் நீரஜின் பயோபிக்கில் நடிப்பது குறித்து வரும் கோரிக்கைகளை கவனித்து வருகிறேன். நீரஜ் சோப்ரா பார்க்க நன்றாக இருக்கிறார். எனது பயோபிக் என்று ஏதாவது எடுக்கப்பட்டால் அதில் எனது கதாபாத்திரத்தில் அவர் நடிக்க வேண்டும், என்று குறிப்பிட்டுள்ளார்.