குட் பேட் அக்லி படத்திற்காக அனிருத் பாடிய முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | பாரபட்சம் காட்டுவது வருத்தமாக உள்ளது : ஜோதிகா | ரீ-ரிலீஸ் ஆகும் தனுஷின் பொல்லாதவன் | சிம்பு 51வது பட அப்டேட் தந்த அஷ்வத் மாரிமுத்து | 'லால் சலாம்' ஓடிடி ரிலீஸ் எப்போது? | தனுஷ் 55வது படத்தின் படப்பிடிப்பு எப்போது? | இறுதிக்கட்டத்தில் ‛7ஜி ரெயின்போ காலனி 2' | பாலா செய்த அதே தவறைச் செய்கிறாரா வெற்றிமாறன்? | பெண் தொழில்நுட்ப கலைஞர்கள் மட்டுமே பணியாற்றியுள்ள முதல் மலையாள படம் 'மும்தா' | ஸ்வீட் ஹார்ட் : விஜய்யை புகழும் வில்லன் பாபி தியோல் |
பிரபல பாலிவுட் நடிகர் நஸ்ருதீன் ஷா. யதார்த்த நடிப்புக்கு புகழ் பெற்றவர். ஆரம்ப காலத்தில் ஹீரோவாக நடித்தவர் அதன் பிறகு வில்லன், குணசித்ர வேடங்களில் நடித்தார். பத்மபூஷண் விருது பெற்றவர். ஆங்கில படங்கள் மூலம் வெளிநாடுகளில் புகழ்பெற்றவர்.
70 வயதான நஸ்ருதீன் ஷா மும்பையில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். நேற்று அவருக்கு திடீரென நிமோனியா காய்ச்சல் ஏற்பட்டது. இதை தொடர்ந்து மும்பை கார் பகுதியில் உள்ள இந்துஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த தகவலை நஸ்ருதீன் ஷாவின் மனைவி ரத்னா பதக் ஷா தெரிவித்துள்ளார்.
உ.பி மாநிலம் பராபங்கியை சேர்ந்தவர் நசுருதீன் ஷா. இவர் 19ம் நூற்றாண்டை சேர்ந்த ஆப்கன் மாவீரர் ஜன் பிஷன் கான் வம்சத்தில் வந்தவர், புகழ்பெற்ற பாகிஸ்தானிய நடிகர் சையத் கமல் ஷா, பாகிஸ்தான் உளவு துறை தலைமை இயக்குநர் ஷா மெஹபூப் ஆலம் ஆகியோரின் உறவினர் .