பிளாஷ்பேக்: “காவல் தெய்வம்” ஆன ஜெயகாந்தனின் “கை விலங்கு” | நாயகியை 'டிரோல்' செய்ய வைத்தாரா நடிகரின் மேனேஜர்? | தள்ளிப் போகிறதா 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' ? | காந்தாரா 2 படப்பிடிப்பு நிறைவு : மேக்கிங் வீடியோ வெளியிட்டு ரிஷப் ஷெட்டி அசத்தல் | என்னங்க பண்ணுறது, அப்படிதான் வருது : ‛எட்டுத் தோட்டாக்கள்' வெற்றி | வருத்தத்தில் கயாடு லோஹர் | ஜி.வி.பிரகாஷ் விட்டுக்கொடுத்த பல கோடி சம்பளம் | பாலிவுட்டில் வசூலைக் குவிக்கும் 'சாயரா' | 'நாட்டு நாட்டு' பாடகர் ராகுலுக்கு ரூ.1 கோடி பரிசு | நீண்ட இடைவெளிக்குப் பின் சினிமா பத்திரிகையாளர் சந்திப்பில் பவன் கல்யாண் |
இயக்குனர் ராம் கோபால் வர்மா போல, பாலிவுட் நடிகரும் யூடியூப் விமர்சகருமான கமால் ரஷீத் கான் பிரபலங்கள் குறித்து சர்ச்சையான கருத்துகளை அவ்வப்போது வெளியிட்டு வருகிறார்.. பாலிவுட் நட்சத்திரங்கள் மட்டுமல்லாமல், மோகன்லால், ரஜினி, அஜித் என தென்னிந்திய முன்னணி நடிகர்களையும் அவர்கள் படங்கள் வெளியாகும் சமயத்தில் விமர்சித்துள்ள இவர், சமீபத்தில் வெளியான சல்மான்கானின் ராதே படம் குறித்து மோசமாக விமர்சித்தார். இதனால் சல்மான்கான் இவர் மீது அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்தநிலையில் கமால் கான், “உங்கள் ஆதரவுக்கு நன்றி கோவிந்தா” என கூறி ஒரு வெளியிட்டுள்ள டுவீட் ஒன்று, பாலிவுட் நடிகர் கோவிந்தாவுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. சல்மான்கான் சர்ச்சையில் இந்த கமால் கானுக்கு ஆதரவாக கோவிந்தா இருக்கிறாரோ என்பது போன்று ஊடகங்களில் செய்திகள் வெளியாக ஆரம்பித்தன.
இதனால் பதறிப்போன கோவிந்தா, “நான் கமால் கானுடனான தொடர்பை நிறுத்தி பல வருடங்கள் ஆகின்றன. அது வேறு யாராவது அவருடைய நண்பரான கோவிந்தாவாக இருக்கலாம். அதனால் சல்மான்கான் சர்ச்சையில் என்னை தொடர்பு படுத்த வேண்டாம்” என கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்தநிலையில் கோவிந்தாவையும் கிண்டலடிக்கும் வகையில், “நிஜம் தான்.. அது நீங்கள் இல்லை கோவிந்தா ஜி. என்னுடைய நண்பர் கோவிந்தா பற்றித்தான் நான் கூறியிருந்தேன்” என கூறியுள்ளார் கமால் கான்.. எப்படியோ சல்மான்கான் விவகாரத்தில் தான் சிக்கவில்லை என நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளார் கோவிந்தா.