வதந்தி 2 வெப்சீரிஸில் இரண்டு நாயகிகள் | தர்பார் தோல்வி குறித்து ஓபன் ஆக பேசிய ஏ.ஆர்.முருகதாஸ் | தமிழில் ரீமேக் ஆகும் கன்னட படம் 'சூ ப்ரம் சோ' | சர்ச்சில் ரொமான்ஸ்: ஜான்வி கபூர் படத்திற்கு எதிர்ப்பு | பிளாஷ்பேக்: ரீ என்ட்ரி வாய்ப்புகளை மறுத்த சுவலட்சுமி | ‛கேங்ஸ்டர்' ஆக ‛லெஜண்ட்' சரவணன் | ஆண்ட்ரியா படத்தை பார்க்க நீதிபதிகள் முடிவு | சர்தார் 2 படத்தில் உள்ள சிக்கல் | பிளாஷ்பேக்: எழுத்தாளருக்கான தேசிய விருது பெற்ற முதல் நடிகை | இரண்டு பட வாய்ப்பை தவறவிட்ட அனுபமா பரமேஸ்வரன் |
1989-ல் இந்தியில், ஸ்ரீதேவி நடிப்பில் வெளியான படம் சால்பாஸ். ரஜினிகாந்த் கதாநாயகனாக நடித்திருந்த இந்த படத்தில் ஸ்ரீதேவி இரண்டு வேடங்களில் நடித்திருந்தார். இந்த படம் தமிழில் அஞ்சு மஞ்சு என்கிற பெயரில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியானது. இந்த நிலையில் இந்த படம் தற்போது 'சால்பாஸ் இன் லண்டன்' என்கிற பெயரில் ரீ-மேக் செய்யப்பட இருக்கிறது. இந்த படத்தில் ஸ்ரீதேவி நடித்த கதாபாத்திரத்தில் முதன்முறையாக இரண்டு வேடங்களில் நடிக்கிறார் ஷ்ரத்தா கபூர்.
பொதுவாக நடிகைகளுக்கு ரொம்பவே அரிதாக கிடைக்கின்ற டபுள் ஆக்சன் என்கிற வாய்ப்பு, தனக்கு முதன்முறை கிடைத்திருப்பதை பெருமையுடன் பகிர்ந்து கொண்டுள்ளார் ஷ்ரத்தா கபூர். டி-சீரிஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தை இயக்குனர் பங்கஜ் பரசர் இயக்குகிறார் 1989 சால்பாஸ் நிகழ்த்திய அதே மாயாஜாலத்தை இந்த படமும் நிகழ்த்துமா என பொறுத்திருந்து பார்க்கலாம்