டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

ராகவா லாரன்ஸ் இயக்கத்தில், அக்ஷய்குமார், கியாரா அத்வானி மற்றும் பலர் நடிப்பில் கடந்த வருடம் ஓடிடியில் வெளிவந்த படம் 'லட்சுமி'. தமிழில் வெளிவந்து மாபெரும் வெற்றியைப் பெற்ற 'காஞ்சனா' முதல் பாகத்தின் ஹிந்தி ரீமேக்தான் இந்தப் படம்.
படம் ஓடிடியில் வெளிவந்த போது நெகட்டிவ் விமர்சனங்கள் தான் அதிகம் வந்தன. மிகவும் மோசமான படம் என பலரும் விமர்சனம் செய்திருந்தார்கள். ஆனால், இப்படம் சமீபத்தில் டிவியில் ஒளிபரப்பானது. முதல் முறை ஒளிபரப்பில் கடந்த 5 வருட ஹிந்திப் படங்களின் டிவி ரேட்டிங் சாதனையை இப்படம் முறியடித்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் 21ம் தேதி இரவு 8 மணிக்கு ஸ்டார் கோல்டு டிவியில் ஒளிபரப்பான இந்தப் படம், 63 மில்லியன் பார்வையாளர்களை சென்றடைந்துள்ளது. படத்திற்கு 2.5 கோடி தடப்பதிவுகள் கிடைத்துள்ளன. இதற்கு முன்பு 'ஹவுஸ்புல் 4' படம் 57 மில்லியன் பார்வையாளர்களைச் சென்றடைந்திருந்தது. அதற்கு 2.15 தடப்பதிவுகள் கிடைத்திருந்தது.
கடந்த 5 வருடங்களில் ஹிந்தி டிவிக்களில் முதல் முறையாக ஒளிபரப்பாகும் படங்களில் அதிக ரேட்டிங்கை 'லட்சுமி' பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
படத்தின் இந்த மாபெரும் சாதனைக்கு இயக்குனர் ராகவா லாரன்ஸ், அக்ஷய்குமார் நன்றி தெரிவித்துள்ளனர்.