பாரதத்தின் கலாசாரம் தெரியாத இளைஞர்கள்: ரஜினி வேதனை | ஆன்லைன் முன்பதிவு டிரெண்டிங்கில் முந்தும் 'ஹிட் 3' | ஏஐ தொழில்நுட்பத்தில் வ.உ.சி வாழ்க்கை வரலாற்று படமாக உருவாகும் 'நாவாய்' | 'டிடி நெக்ஸ்ட் லெவல்' டிரைலர் - கவுதம் மேனனையே கலாய்ச்சிட்டீங்களே… | பிஸியோதெரபி சிகிச்சையில் அஜித்குமார் | மே ரிலீஸ் பட்டியலில் ஒவ்வொன்றாய் சேரும் படங்கள் | 'ரெட்ரோ' வெற்றி, யார், யாருக்கு முக்கியம்? | கதாநாயகிகள் அதிக சம்பளம் கேட்கக் கூடாதா? | தேவ் கட்டா வெப் சீரிஸில் நடிக்கிறாரா நாக சைதன்யா | இந்தியாவில் முதலில் வெளியாகும் டாம் குரூஸ் படம் |
சமீபத்தில் தனுஷுடன் இணைந்து நடித்து வந்த அட்ராங்கி ரே படத்தில் நடித்து முடித்த பாலிவுட் நடிகர் அக்சய் குமார், அடுத்தததாக ராம்சேது என்கிற படத்தில் நடிக்க இருக்கிறார். ராமஜென்ம பூமியை மையமாக வைத்து உருவாக இருக்கும் இந்தப்படத்தின் பெரும்பாலான காட்சிகளை நிஜமான கதைக்களமான அயோத்தியில் படமாக்க இருக்கிறார்கள். இந்தப்படத்தை படமாக்கும்போது எந்தவித சர்ச்சையும் வந்துவிட கூடாது என்பதற்காக உ.பி முதல்வர் ஆத்யேந்திரநாத்தை சில மாதங்களுக்கு முன்பு அக்சய் குமார் நேரில் சந்தித்து பேசியிருந்தார்.
சமீபத்தில் இந்தப்படத்திற்கான துவக்க விழா பூஜை அயோத்தியில் நடைபெற்றது. படப்பிடிப்பும் நேற்று முதல் துவங்கியுள்ளது. இந்தநிலையில் இந்தப்படத்தில் தனது பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளார் அக்சய் குமார். இந்தப்படத்தில் இவர் தொல்பொருள் ஆராய்ச்சி நிபுணராக நடிக்கிறார் என்பதுடன் இவரது கதாபாத்திரமான ராமசேது என்கிற பெயருக்கு ஏற்ற மாதிரியும் இவரது தோற்றத்தை வடிவமைத்துள்ளார்களாம். கதாநாயகிகளாக ஜாக்குலின் பெர்னாண்டஸ் மற்றும் நஸ்ரத் பரூச்சா ஆகியோர் நடிக்கின்றனர்.