தமிழில் ரீமேக் ஆகும் ஸ்ரீ லீலாவின் 'கிஸ்' | ராஜமவுலி இயக்கத்தில் மூன்று பாகங்களாக 'மகாபாரதம்' | படப்பிடிப்புகளுக்கு ஒத்துழைக்க மறுப்பு : பெப்சி மீது தயாரிப்பாளர் சங்கம் வழக்கு | பிளாஷ்பேக்: இரண்டு ஆக்சன் ஹீரோக்கள் மோதிய 'நல்ல நாள்' | பிளாஷ்பேக் : ஆண்டாள் பெருமையை உலகிற்கு சொன்ன படம் | புஷ்பா 2, தியேட்டர் நெரிசல் : குணடைந்த சிறுவன் | நான் இன்னும் மிடில் கிளாஸ் தான்... என் சாதனைக்கு உரியவர் ஷாலினி : அஜித் பேட்டி | டெஸ்ட்டில் விட்டதை கேசரி சாப்டர் 2-வில் பிடிப்பாரா மாதவன் | 300 தியேட்டர்களில் வெளியாகும் டூரிஸ்ட் பேமிலி | அழகுக்காக அறுவை சிகிச்சையா : ரகுல் ப்ரீத் சிங் பதில் |
புஷ்கர், காயத்ரி இயக்கத்தில் விஜய் சேதுபதி, மாதவன், ஸ்ரத்தா ஸ்ரீநாத், வரலட்சுமி சரத்குமார், கதிர் உள்ளிட்ட பலர் நடிப்பில் 2017ம் ஆண்டு வெளியான படம் விக்ரம் வேதா. சஷிகாந்த் தயாரிப்பில் வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்த படம் தற்போது ஹிந்தியில் ரீமேக் ஆகிறது. இதனையும் சஷிகாந்த் தயாரிக்கிறார், புஷ்கர், காயத்ரி இயக்குகிறார்கள். மாதவன் நடித்த விக்ரம் கேரக்டரில் சைப் அலி கானும், விஜய் சேதுபதி நடித்த வேதா கேரக்டரில் ஹிருத்திக் ரோஷனும் நடிக்கின்றனர். ஹிருத்திக் ரோஷன் கடைசியாக வார் படத்தில் நடித்தார். கடந்த ஆண்டு அவரது படங்கள் எதுவும் வெளிவரவில்லை.
தற்போது விக்ரம் வேதா அவருக்கு 25வது படமாக அமைவதால் இந்த படத்திற்காக கூடுதல் கவனம் செலுத்த தொடங்கி உள்ளார். குறிப்பாக தனது உடல் எடையை கூட்டி வருகிறார். விஜய்சேதுபதியின் மேனரிசத்தை அப்படியே காப்பி அடிக்காமல் தனக்கென தனி மேனசரிம் ஒன்றை உருவாக்கி வருகிறார். மே மாதம் இதன் படப்பிடிப்பு தொடங்கும் என்று தெரிகிறது.