நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் | காந்தாரா கிராமத்தில் குடியேறுகிறார் ரிஷப் ஷெட்டி | பெண்கள் அரசியல் கூட்டங்களுக்கு செல்லக்கூடாது: அம்பிகா அட்வைஸ் | நயன்தாரா வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் | பிளாஷ்பேக்: மம்பட்டியான் பாணியில் உருவான 'கரிமேடு கருவாயன்' | பிளாஷ்பேக்: தமிழ், பெங்காலியில் உருவான படம் | கார்த்தி நடிக்கும் ‛வா வாத்தியார்' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தமிழகம் பக்கமே வரலை... ஆனாலும் தமிழில் ஹிட் |
கடந்த சில மாதங்களுக்கு முன் பாலிவுட் இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்துகொண்டு இறந்துபோனார். அதை தொடர்ந்து போலீஸ் விசாரணையில் அவரது காதலி ரியா சக்கர்போர்த்தி சிக்கினார். பின்னர் சுஷாந்துக்கு போதைப்பொருள் சப்ளை செய்ததாக போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறைவாசம் செய்து ஜாமீனில் வெளிவந்தார். ஏற்கனவே வேறு சிலருடன் ரியா நெருக்கமாக நட்பு பாராட்டி வந்தார் என்றும் சில சர்ச்சை செய்திகள் வெளியாகி வந்தன.
இந்தநிலையில் ரியாவின் நண்பரான் ராஜீவ் லக்ஷ்மண் என்பவர், ரியா சக்கர்போர்த்தியுடன் நெருக்காமாக தான் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் வெளியிட்டதுடன் 'மை கேர்ள்' என்கிற கேப்ஷனும் கொடுத்திருந்தார். இதை தொடர்ந்து சோஷியல் மீடியாவில் சர்ச்சையான கருத்துக்களும் கமெண்டுகளும் எழவே, உடனடியாக நாதா புகைப்படங்களை அழித்துவிட்டார் ராஜீவ் லக்ஷ்மண்.
மேலும், “நான் வெளியிட்ட புகைப்படங்கள் மற்றும் கேப்ஷனாக குறிப்பிட்ட வார்த்தைகளால் தேவையில்லாத பிரச்சனையை உருவாக்கிவிட்டது போல தோன்றுகிறது. ரியா எனது நீண்டநாள் தோழி. மீண்டும் அவரை சந்தித்ததில் மகிழ்ச்சி” என்றும் வருத்தம் தெரிவித்துள்ளார்.