இந்த மாதிரி வெற்றிக்காக 10 ஆண்டுகள் காத்திருந்தேன் : ‛ஆட்டமா தேரோட்டமா' பாடல் குறித்து ரம்யா கிருஷ்ணன் | நிதின் ஜோடியான பூஜா ஹெக்டே | மறுபிரவேசத்துக்கு வலுவான கதாபாத்திரங்களை தேடும் பிரணிதா | ஜனநாயகன் படப்பிடிப்பு தளத்துக்கு திரண்ட ரசிகர்கள் : பாபி தியோல் ஆச்சரிய தகவல் | பொய் செய்தி பரப்பாதீர்கள் : புகழ் வேதனை | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் பிரேமலு நாயகி | மிருணாள் தாக்கூர் உடன் இணைய விரும்பும் சிவகார்த்திகேயன் | நடிகராக அறிமுகமாகும் கங்கை அமரன் | அஜித் 64 படத்தில் மிஷ்கின்? | உண்மை சம்பவங்கள் அடிப்படையில் சிறை : லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட முதல்பார்வை |
பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனை டுவிட்டரில் 45 மில்லியன் பாலோயர்கள் பின் தொடர்கின்றனர். அவரது இந்த சாதனைக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் அவரது ரசிகை ஜாஸ்மின் என்பவர் அமிதாப்பின் பழைய புகைப்படம் ஒன்றை பகிர்ந்திருந்தார்.
அமிதாப், தனது தந்தையின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெறும் அந்தப் புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்திலும் பகிர்ந்துள்ள அமிதாப், “டுவிட்டரும், ரசிகர் ஜாஸ்மினும் 45 மில்லியன் பாலோயர்கள் வந்திருப்பதற்கு இந்த புகைப்படம் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதற்கு அவர்களுக்கு நன்றி. ஆனால், அதற்குமேலான நினைவுகள் இந்தப் புகைப்படத்தில் பொதிந்திருக்கிறது" எனத் தெரிவித்துள்ளார்.
கூலி படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது படப்பிடிப்பு தளத்தில் பயங்கர விபத்தில் சிக்கினார் அமிதாப். உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமிதாப்பிற்கு மூன்றுக்கும் மேற்பட்ட அறுவைச் சிகிச்சைகள் செய்யப்பட்டது. அப்போது அவருக்கு செலுத்தப்பட்ட ரத்தத்தின் மூலம் கல்லீரல் நோய் அமிதாப்பிற்கு ஏற்பட்டது. இன்றளவும் அந்தப் பிரச்சினையால் உடல்நலப் பாதிப்பிற்கு ஆளாகி வருகிறார் அமிதாப்.
அப்போது மருத்துவமனையில் இருந்து திரும்பிய அமிதாப்பை பார்க்க வந்த அவரது தந்தை கண்ணீர் விட்டு அழுதார். அவரது காலில் விழுந்து அமிதாப் ஆசி பெற்றார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தைத் தான் ஜாஸ்மின் தற்போது பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.