Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தக் லைப் பர்ஸ்ட் ஷோ : படக்குழுவினர் புறக்கணிப்பா?

05 ஜூன், 2025 - 04:07 IST
எழுத்தின் அளவு:
Thug-Life-First-Show-Will-the-crew-boycott

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா நடித்த தக்லைப் படம் இன்று வெளியாகி உள்ளது. தமிழக அரசு சிறப்பு அனுமதி அளித்ததால் தமிழகத்தில் பல இடங்களில் காலை 9 மணிக்கு முதல்காட்சி தொடங்கியது. சென்னையில் நடக்கும் முதல்காட்சியில் சம்பந்தப்பட்ட படங்களில் நடித்த பிரபலங்கள் பங்குபெறுவது, படம் முடிந்த பின் பேட்டி கொடுப்பது வழக்கம். ஆனால், தக்லைப் படத்தை இன்று காலை எந்த தியேட்டரிலும் கமல், மணிரத்னம், திரிஷா ஆகியோர் பார்த்ததாக தெரியவில்லை.

சிம்பு நேற்று இரவே வெளிநாடு சென்றுவிட்டார். மற்ற படக்குழுவினரும் படம் பார்த்ததாக தெரியவில்லை கர்நாடக சர்ச்சை காரணமாக, முதல் ஷோவுக்கு படக்குழு வரவில்லை. அவர்கள் ஏதாவது பேசினால் வில்லங்கம் ஆகிவிடும். படத்துக்கு மைனஸ் என்று கருதியதால் வரவில்லை என்று கூறப்படுகிறது. தக் லைப் பட முதல் முன்னோட்டத்தில் கமலின் பெயர் ரங்கராய சக்திவேல் நாயக்கர் என்று இருந்தது. ஆனால் படத்தில் ஜாதி பெயர் இல்லை. பல இடங்களில் தனது பெயரை கமல்ஹாசன் சொல்கிறார். அதில் எதிலும் இல்லை. படக்குழு நீக்கியதா? சென்சார் நீக்கியதா என தெரியவில்லை.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
விஜய் உணர்ச்சி வசப்பட்டாரா? அழுதாராவிஜய் உணர்ச்சி வசப்பட்டாரா? அழுதாரா டாக்டராக நடிக்கும் டாக்டர் டாக்டராக நடிக்கும் டாக்டர்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

06 ஜூன், 2025 - 08:06 Report Abuse
சேகர் திரிஷா தான் நடித்த அனைத்து சமீபத்திய படங்களின் காட்சிகளுக்கு வந்திருந்தார். இந்த படத்துக்கு ஏன் வரவில்லை என தெரியவில்லை. அவர் நடித்ததை அவரே மற்றவர்களுடன் பார்க்க கூசி விட்டதோ என்னமோ
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in