எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
அட்லி இயக்கத்தில் விஜய், சமந்தா, எமி ஜாக்சன் மற்றும் பலர் நடிப்பில் தமிழில் 2016ல் வெளிவந்த படம் 'தெறி'. இப்படத்தை இத்தனை வருடங்களுக்குப் பிறகு ஹிந்தியில் 'பேபி ஜான்' என்ற பெயரில் ரீமேக் செய்து கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியிட்டார்கள்.
ஹிந்தித் தயாரிப்பாளர்கள் சிலருடன் இணைந்து அட்லியும் தயாரிக்க வருண் தவான், கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் நடிக்க வெளியான படம் கடந்த மூன்று நாட்களில் சுமார் 20 கோடியை மட்டுமே வசூலித்துள்ளது. முதல் நாள் வசூலானதை விட இரண்டாம் நாள் வசூல் பாதியாகக் குறைந்துவிட்டது. சுமார் 150 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் தயாராகியுள்ள படம் இப்போதைய சூழலில் 50 கோடி வசூலைக் கடந்தாலே அதிகம் என்கிறார்கள்.
இயக்குனராக வெற்றி பெற்ற அட்லி தயாரிப்பாளராக இரண்டாவது தோல்வியைத் தழுவுகிறார். தயாரிப்பாளராக அவர் முதலில் தயாரித்து தமிழில் 2017ல் வெளிவந்த 'சங்கிலி புங்கிலி கதவைத் தொற' படம் தோல்வியைத் தழுவியது. ஹிந்தியிலும் பெரிய தோல்வி என்பதால் இனி தயாரிப்புப் பக்கம் அவர் போவாரா என்பது சந்தேகம்தான்.