நவம்பர் 8ல் ஒரே ஒரு வெளியீடு… | ஏழை மக்களை கவுரவித்த மீனாட்சி சேஷாத்ரி, ராகுல் ராய், தீபக் திஜோரி | பாலியல் குற்றச்சாட்டை ஆதாரத்துடன் நிரூபிக்கவில்லை: மஞ்சு வாரியர் வழக்கு தள்ளுபடி | 10 ஆயிரம் தியேட்டர்களில் 'கங்குவா' ரிலீஸ்? | ஹர்பஜன் சிங் நடிக்கும் 'சேவியர்' படத்தில் நாயகியான ஓவியா | பாடம் கற்றுத் தந்த பிச்சைக்காரன் | தமிழில் அறிமுகமாகும் கேரள மாடல் | பிரபல போஜ்புரி பாடகி சாரதா சின்கா காலமானார் | தண்டேல் பட ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு | 'ராமாயணா' - 2026 தீபாவளி வெளியீடு |
தமிழில் விஜய் சேதுபதி பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருவதை போன்று ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியை சல்மான் கான் தொகுத்து வழங்கி வருகிறார். அந்த நிகழ்ச்சியில் பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு அளிக்கப்பட்ட ஒரு டாஸ்கில், கழுதையை பராமரிக்க வேண்டும் என்று கூறியவர்கள், ஒரு கழுதையை பிக்பாஸ் வீட்டுக்குள் கொண்டு வந்து கட்டி போட்டிருக்கிறார்கள். ஆனால் இது குறித்த பிரோமோ வெளியிடப்பட்டதை அடுத்து சல்மான்கான் மற்றும் ஹிந்தி பிக்பாஸ் தயாரிப்பாளர்களுக்கு பீட்டா அமைப்பு கடிதம் எழுதியிருக்கிறது.
அதில், விலங்குகளை பொழுது போக்குவதற்காக பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இது அவற்றுக்கு மனஅழுத்தம் அளிப்பது மட்டுமின்றி அதை பார்ப்பவர்களுக்கும் மன உளைச்சலை ஏற்படுத்தும். அதனால் அந்த கழுதையை உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என்று பீட்டா அமைப்பு தெரிவித்துள்ளது. ஆனபோதும் ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியின் தயாரிப்பாளர்கள், பீட்டா அமைப்பின் இந்த கடிதத்திற்கு இன்னும் பதில் கொடுக்கவில்லை.