'ஹவுஸ் மேட்ஸ்' மூலம் தமிழுக்கு வரும் அர்ஷா பைஜு | ரஜினி நடிக்கும் கூலி படக்கதை என்ன? ஆகஸ்ட் 2ல் டிரைலரில் தெரியும்...! | குற்றம் கடிதல் 2 உருவாகிறது : கதைநாயகன் ஒரு நல்லாசிரியர் | ரத்து செய்யப்பட்ட இசை நிகழ்ச்சியை மீண்டும் நடத்தும் அனிருத் | பிளாஷ்பேக்: வில்லனை ஆதரித்த கமல் | பிறந்தநாளில் ரசிகர்கள் ஆசையை நிறைவேற்றிய தனுஷ் | பிளாஷ்பேக்: டைட்டிலில் பெயர் போட்டுக்கொள்ளாத தயாரிப்பாளர் | எம்ஜிஆர் - கருணாநிதி, நட்பு, மோதல் தழுவலில் 'காந்தா'? | கோவாவில் கூடிய 90 ஸ்டார்ஸ் : ஆட்டம், பாட்டம்,பார்ட்டி என கொண்டாட்டம் | 25 நாட்களைக் கடந்த '3 பிஹெச்கே, பறந்து போ' |
தர்பார் படத்திற்கு பின் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது சிவகார்த்திகேயன் நடிக்க ஒரு படத்தை இயக்கி வருகிறார். இதுதவிர மீண்டும் ஹிந்தியில் படம் இயக்கும் வாய்ப்பு வந்தது. சிக்கந்தர் என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் நாயகனாக சல்மான்கான் நடிக்கிறார். முதன்முறையாக இவர்கள் இணைந்து பணியாற்றும் படம் இதுவாகும்.
சல்மான் கானுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். மற்றொரு கதாநாயகியாக கரீனா கபூர் நடிக்கிறார். கடந்த சில மாதங்களாக இந்த படத்திற்கான முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில் நேற்று ஜூன் 18ம் தேதி முதல் இதன் படப்பிடிப்பு மும்பையில் துவங்கி உள்ளது. படப்பிடிப்பு தளத்தில் சல்மான் மற்றும் தயாரிப்பாளர் சாஜித் உடன் எடுக்கப்பட்ட போட்டோவை பகிர்ந்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார் முருகதாஸ்.