நடிகை ஸ்ரீ லீலா கன்னட சினிமாவின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர். இதையடுத்து அவர் தெலுங்கு படங்களில் நடித்தது மூலம் பிரபலமானார். ஆனால், அவர் நடித்து சமீபத்தில் வெளிவந்த தெலுங்கு படங்கள் தொடர் தோல்வியை சந்தித்தன.
சமீபகாலமாக ஸ்ரீ லீலா தமிழில் விரைவில் அறிமுகமாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இப்போது நேரடி ஹிந்தி படம் ஒன்றில் ஸ்ரீ லீலா நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். நடிகர் சையிப் அலிகானின் மகன் இப்ராஹிம் கான் கதாநாயகனாக நடிக்கும் காதல் கதைகள படத்தில் கதாநாயகியாக நடிக்கவுள்ளார் ஸ்ரீ லீலா. இந்த தகவல் பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.