‛துப்பாக்கி 2': ஐடியா பகிர்ந்த ஏ.ஆர்.முருகதாஸ் | சிரிக்க முடியாத நகைச்சுவை நடிகர்கள்!: மதுரை முத்து | ‛ஓ.ஜி' படத்திலிருந்து பிரியங்கா மோகன் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது! | ‛திரிஷ்யம் 3' படத்தின் படப்பிடிப்பு எப்போது? புதிய தகவல் இதோ! | த்ரிவிக்ரம், வெங்கடேஷ் புதிய கூட்டணி! | பராசக்தி படத்தில் இணைந்த அப்பாஸ்! | மீசைய முறுக்கு 2ம் பாகம் உருவாகிறதா? | சரிந்த மார்க்கெட்டை காப்பாற்ற அதிரடி முடிவெடுத்த தாரா | உயர பறந்த 'லிட்டில் விங்ஸ்' : சாதனையை பகிரும் இயக்குநர் நவீன் மு | தோழிகளால் நடிகை ஆனேன்: சுபா சுவாரஸ்யம் |
பிரபல பாலிவுட் நடிகர் சத்ருக்கன் சின்ஹா. அவரது மகள் சோனாக்ஷி சின்ஹா. 2010ல் வெளிவந்த 'தபாங்' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த 'லிங்கா' படத்தின் மூலம் தமிழிலும் அறிமுகமானார்.
கடந்த சில வருடங்களாக அவருக்கான திரையுலக வாய்ப்புகள் குறைந்துவிட்டது. சமீபத்தில் வெளியான வெப் சீரிஸ் ஆன 'ஹீராமண்டி'யில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது இரண்டு ஹிந்திப் படங்களில் நடித்து வருகிறார்.
சோனாக்ஷி கடந்த சில வருடங்களாகவே ஜாகீர் இக்பால் என்பவரைக் காதலித்து வந்தார். இருவருக்கும் ஜுன் 23ம் தேதி மும்பையில் திருமணம் நடக்க உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இருவரது குடும்பத்தினர், நெருங்கிய நண்பர்கள் மட்டும் திருமணத்திற்கு அழைக்கப்பட்டு வருகிறார்கள்
ஜாகீர் இக்பால் ஒரு நடிகர்தான். 2019ல் வெளிவந்த 'நோட்புக்' படத்தில் அறிமுகமானவர். சோனாக்ஷி, ஜாகீர் இருவரும் 'டபுள் எக்ஸ்எல்' படத்தில் இணைந்து நடித்துள்ளார்கள்.