ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
கொடுமையான வெயில் காரணமாக 'ஹீட் ஸ்ட்ரோக்' என்கிற வெப்ப வாத பிரச்சினை பலருக்கும் ஏற்பட்டு வருகிறது. பாலிவுட் நடிகர் ஷாருக்கானும் இந்த பிரச்னையால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
ஷாருக்கான் ஐ.பி.எல். கிரிக்கெட் அணிகளில் ஒன்றான கோல்கட்டா அணியின் உரிமையாளராக உள்ளார். நேற்று முன்தினம் கோல்கட்டா அணிக்கும், ஐதராபாத் அணிக்கும் இடையே ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியை தனது மகள் சுகானா மற்றும் மகன் அப்ராம் ஆகியோருடன் பார்த்தார். இந்த போட்டியில் கோல்கட்டா அணி வெற்றி பெற்றது. இந்த உற்சாகத்தால் ஷாருக்கான் மற்றும் அவரது மகன், மகள் 3 பேரும் ஸ்டேடியத்தை சுற்றி வந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினர். மேலும் தனது மகளின் பிறந்தநாளையும் அந்த வெற்றியுடன் சேர்த்து கொண்டாடினார்.
இந்த நிலையில் திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் ஆமதாபாத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு நீர்சத்து குறைந்து அவர் வெப்ப வாதத்தால் பாதிக்கப்பட்டது தெரியவந்தது. அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். கடுமையான வெயில் தாக்கம் காரணமாக அவர் வெப்ப வாதத்தால் பாதிக்கப்பட்டதாக தெரிகிறது. சில நாள் சிகிச்சைக்கு பிறகு ஷாருக்கான் மும்பை திரும்புவார் என்று கூறப்படுகிறது.