மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. |
பாலிவுட்டில் பிரபலமான படம் ‛ஹவுஸ்புல்'. இதுவரை நான்கு பாகங்கள் வெளியாகி உள்ளன. இதன் 5ம் பாகம் அடுத்து தயாராகிறது. தயாரிப்பாளர் சஜித் நதியாத்வாலா இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 5ம் பாகத்திலும் அக்ஷய் குமார், ரித்தேஷ் தேஷ்முக் தொடருகின்றனர். இவர்களுடன் ஏற்கனவே ஹவுஸ்புல் 3யில் நடித்த அபிஷேக் பச்சனும் இணைகிறார். தருண் மன்சுகானி இயக்குகிறார். முந்தைய பாகங்களை போலவே 5ம் பாகமும் கலகலப்பான காமெடி படமாக உருவாகிறது. ஆகஸ்ட் முதல் இங்கிலாந்தில் படப்பிடிப்பை தொடங்குகின்றனர்.
தயாரிப்பாளர் சஜித் கூறுகையில், ‛‛ஹவுஸ்புல் 5-யில் அபிஷேக்கை மீண்டும் கொண்டு வருவதில் மகிழ்ச்சி. அவருடைய அர்ப்பணிப்பு, நகைச்சுவை ஆகியவை எங்கள் படத்தை இன்னும் உயரத்திற்கு கொண்டு செல்லும்'' என்றார்.
அபிஷேக் கூறுகையில், ‛‛ஹவுஸ்புல் சீரிஸ் எனக்கு மிகவும் பிடித்த நகைச்சுவை படம். இதில் நடிப்பதன் மூலம் மீண்டும் எனது வீட்டிற்கு திரும்புவது போன்று உணர்கிறேன். சஜித் உடன் பணிபுரிவது மகிழ்ச்சி. என் சக நடிகர்களான அக்ஷய் மற்றும் ரித்தேஷ் ஆகியோருடன் படப்பிடிப்பு தளத்தில் வேடிக்கையாக இருக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்'' என்றார்.
ஹவுஸ்புல் 5 படம் அடுத்தாண்டு ஜூன் 6ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.