தனுஷ், மோகன்லால் கூட்டணியை உருவாக்க முயற்சி | மீண்டும் தயாரிப்பில் களமிறங்கும் ஹிருத்திக் ரோஷன் | முகேன் ராவ் நடிக்கும் புதிய படம் நிறம் | காந்தி கண்ணாடி முதல் மதராஸி வரை.... ஒவ்வொன்னுன் செம வொர்த்.... இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | மும்பையில் புதிய வீடு வாங்கி குடியேறிய சமந்தா | அப்பா தம்பி ராமயைா கதை எழுத, மகன் உமாபதி இயக்கும் படம் | செல்லப்பிராணி, குழந்தை அன்பை விவரிக்கும் ‛கிகி கொகொ' | தீபாவளிக்கு 'டியூட்' மட்டும் தானா? : பிரதீப் ரங்கநாதன் தகவல் | மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா | மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ? |
பாலிவுட்டின் பிரபல நடிகை கங்கனா ரணாவத். இவர் நடித்து, இயக்கி உள்ள ‛எமெர்ஜன்சி' படம் வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது. நடந்து வரும் லோக்சபா தேர்தலில் ஹிமாச்சலில் மாண்டி தொகுதியில் பா.ஜ., சார்பில் போட்டியிடுகிறார். இதற்காக தீவிர பிரச்சாரத்தில் அவர் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த கங்கனாவிடம் அரசியலில் பயணிக்க தொடங்கி இருப்பதால் சினிமாவிற்கு முழுக்கு போடுகிறீர்களா என்ற கேள்வி முன் வைக்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த கங்கனா, ‛‛பாலிவுட்டில் பல படங்களில் நடிக்க வேண்டியிருப்பதால் இப்போதைக்கு சினிமாவை விட்டு விலகும் எண்ணமில்லை. அந்த பணிகள் முடிந்தால் தான் அடுத்தக்கட்ட முடிவு எடுக்கப்படும்'' என்றார்.