இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் ஹிந்தியில் கஜினி, ஹாலிடே போன்ற வெற்றி படங்களை கொடுத்தார். சிறு இடைவெளிக்கு பின் ஏ.ஆர் முருகதாஸ் தற்போது நடிகர் சல்மான் கானை வைத்து ஹிந்தியில் 'சிக்கந்தர்' என்கிற படத்தை இயக்குகிறார். இப்படத்தை சாஜித் தயாரிக்கிறார். 2025 ஈத் பண்டிகையை முன்னிட்டு இப்படம் வெளியாகிறது. ஏற்கனவே இதில் கதாநாயகியாக நடிக்க த்ரிஷா, சமந்தா உள்ளிட்ட முன்னனி நடிகைகளின் பெயர்கள் கூறப்பட்டது. இப்போது இதில் கதாநாயகியாக நடிக்க கியாரா அத்வானி ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முருகதாஸ் தற்போது தமிழில் சிவகார்த்திகேயன் நடிப்பில் ஒரு படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை முடித்த பின்னர் சல்மான் படத்தை இயக்க போகிறார்.