ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
பாலிவுட் முன்னணி நடிகர், நடிகைகள் நடித்து சம்பாதிப்பதை விட விளம்பரங்கள் மூலமும் சமூக வலைதளங்கள் மூலமும் அதிகம் சம்பாதிக்கிறார்கள். ஒரு பொருளையும் பிராண்டையும் விளம்பரப்படுத்துவதற்கு இன்ஸ்டாகிராம் தளத்தைப் பயன்படுத்தி கோடிகளில் சம்பாதித்து வருகின்றனர். இன்ஸ்டாகிராமை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கையை பொறுத்து அவர்களது சம்பளம் நிர்ணயிக்கப்படுகிறது.
அந்த வகையில் 89.8 மில்லியன் பாலோயர்சை கொண்ட பிரியங்கா சோப்ரா முன்னணியில் இருக்கிறார். அவர் ஒரு பதிவுக்கு 3 கோடி ரூபாய் கட்டணமாக வசூலிக்கிறார். ஹாலிவுட் படங்கள் மூலம் உலக புகழ் பெற்றிருப்பதால் அவருக்கு இந்த சம்பளத்தை கொடுக்க தயாரிப்பு நிறுவனங்கள் தாராளமாக முன் வருகின்றன. இவருக்கு அடுத்த இடத்தில் தீபிகா படுகோன் இருக்கிறார். அவர் ஒரு பதிவுக்கு ஒண்ணறை கோடி ரூபாய் வாங்குகிறார். ஷ்ரதா கபூர் 1.18 கோடி ரூபாயும், அலியா பட் ஒரு கோடியும் வாங்குகிறார்கள்.