‛தளபதி கச்சேரி' பிளாஸ்ட் : ‛ஜனநாயகன்' முதல் பாடல் வெளியீடு | கோவா திரைப்பட விழாவிற்கு செல்லும் ‛அமரன்' | ஜெயிலர் 2 படத்தை பாலகிருஷ்ணா எதனால் நிராகரித்தார்? | சைபர் கிரைம் மோசடி - ருக்மணி வசந்த் எச்சரிக்கை செய்தி | 2026 பிப்ரவரியில் திரைக்கு வரும் வெங்கட் பிரபுவின் பார்ட்டி | கோவா சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினிக்கு பாராட்டு விழா | உருவக்கேலியை ஏற்க முடியாது ; ஆதரித்தவர்களுக்கு நன்றி : கவுரி கஷன் அறிக்கை | பிளாஷ்பேக் : மலையாள சினிமாவை கதற வைத்த மோனிஷா உன்னி | ரிலீசுக்காக 5 வருடங்கள் காத்திருந்த படம் | லட்சுமி மேனன் மீதான ஆள்கடத்தல் வழக்கு தள்ளுபடி |

இந்தியாவில் அறிமுகமான ஆன்லைன் சூதாட்ட செயலியால் ஏராளமானோர் ஏமாந்து, பணத்தை இழந்து தற்கொலை செய்தனர். இதனால் இதற்கு எதிரான கடும் நடவடிக்கைகளை மத்திய அரசு கொண்டு வந்தது. சட்டவிரோத சூதாட்ட செயலிகளுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆதரவு அளிப்போர் மீது நடவடிக்கை எடுக்கும்படி நுகர்வோர் துறை அமைச்சகம் உத்தரவிட்டு இருந்தது.
அந்த அடிப்படையில் ஆன்லைன் சூதாட்டத்தை ஊக்கப்படுத்தும் வகையில் அதனை விளம்பரம் செய்த பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா, ராணா டகுபதி உள்ளிட்ட 29 நடிகர்கள் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இவர்கள் விசாரணைக்கு நேரில் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தது.
இந்நிலையில் பிரகாஷ்ராஜ் ஐதராபாத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு நேற்று ஆஜரானார். விசாரணைக்கு பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது "சூதாட்ட செயலி விளம்பரத்தில் நடித்ததற்காக எனக்கு ஒரு பைசா கூட கிடைக்கவில்லை. இனி இதுபோன்ற ஆன்லைன் சூதாட்ட செயலி விளம்பரங்களில் நடிக்க மாட்டேன். நான் கூறிய தகவல்களை பதிவு செய்து கொண்டனர். என்னை மீண்டும் விசாரணைக்கு ஆஜராகும்படி அழைக்கவில்லை" என்றார்.