வெனிஸ் திரைப்பட விழாவில் உலகின் கவனத்தை ஈர்த்த படம் | பிளாஷ்பேக்: 30 ஆண்டுகளுக்கு முன்பு கலக்கிய கோர்ட் டிராமா | பிளாஷ்பேக் : முதல் நட்சத்திர வில்லன் | நடிகர் சங்க புதிய நிர்வாகிகள் அறிமுக விழா | பேனர் வைக்க விடாமல் தடுத்தது யார்? மனம் திறப்பாரா கேபிஒய் பாலா | புகழ் நடிக்கும் '4 இடியட்ஸ்' | பூ வச்சது குத்தமாய்யா : நவ்யா நாயருக்கு ரூ.1.14 லட்சம் அபராதம் | சினிமா நிகழ்ச்சிகளை புறக்கணிக்கும் ஸ்ரீகாந்த் | ‛குட் பேட் அக்லி' படத்தில் இளையராஜா பாடல்களை பயன்படுத்த இடைக்கால தடை | ரஜினி, கமல் பட இயக்குனர் யார்? இன்னும் தீராத சந்தேகம் |
மலையாளத்தில் கடந்த வாரம் ‛லோகா சாப்டர் 1 ; சந்திரா' திரைப்படம் வெளியானது. சூப்பர் உமன் கதை அம்சத்துடன் வெளியான இந்த படத்தில் கதாநாயகியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார். இந்த படம் தற்போது 100 கோடி வசூலைத் தாண்டி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படம் பார்த்த, படத்தைப் பற்றி கேள்விப்பட்ட பிரபலங்கள் பலரும் படத்திற்கும் அதில் கதாநாயகியாக நடித்த கல்யாணி பிரியதர்ஷனுக்கும் தங்களது வாழ்த்துகளை பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் பாலிவுட்டின் முன்னணி நடிகையான பிரியங்கா சோப்ராவும் லோகா திரைப்படம் குறித்து தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார். தற்போது ராஜமவுலி, மகேஷ்பாபு கூட்டணியில் உருவாகி வரும் புதிய படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார் பிரியங்கா சோப்ரா. இந்த நிலையில் லோகா திரைப்படம் சமீபத்தில் ஹிந்தியிலும் மொழிமாற்றம் செய்து வெளியாகி உள்ளது.
இது குறித்த தகவல்களை கேள்விப்பட்ட பிரியங்கா சோப்ரா, “இந்தியாவின் முதல் பெண் சூப்பர் ஹீரோ படம் இங்கே வந்திருக்கிறது. தயாரிப்பாளர் துல்கர் சல்மான் மற்றும் லோகா படக்குழுவினர் அனைவருக்கும் எனது வாழ்த்துகள். மலையாள திரை உலகில் ஏற்கனவே பலரின் இதயங்களை இந்த கதை வென்றிருக்கிறது. இப்போது இங்கே ஹிந்தியில் கூட வெல்லப் போகிறது என்னுடைய படம் பார்க்கும் பட்டியலில் லோகா படத்தையும் ஏற்கனவே இணைத்து விட்டேன். நீங்களும் தானே?” என்று கேட்டுள்ளார்.