நிகழ்ச்சிக்கு தாமதமாக வந்த மாதுரி தீக்ஷித் : கோபத்தில் வெளியேறிய ரசிகர்கள் | கேரள அரசு குழந்தை நட்சத்திர விருதுகள் மிஸ்ஸிங் : கிளம்பியது சர்ச்சை | ஆர்யன் பட கிளைமாக்ஸ் மாற்றம் : ஹீரோ விஷ்ணு விஷால் அறிவிப்பு | சாய் அபயங்கரை வாழ்த்திய அல்லு அர்ஜுன்! | வேகம் எடுக்கும் விஜய்யின் 'ஜனநாயகன்' படக்குழு! இம்மாதம் முதல் பாடல் வெளியாகிறது! | அஜித் 64வது படத்தில் நடிக்க விஜய்சேதுபதி, லாரன்ஸிடம் பேச்சுவார்த்தை! | டிரெயின் பட ரிலீசில் அதிரடி முடிவு எடுத்த தாணு | நிஜ வாழ்க்கையில் நடிக்கும் பழக்கம் எனக்கு இல்லை! : சொல்கிறார் பார்வதி | நாகசைதன்யா 24வது படத்தில் மீனாட்சி சவுத்ரி முதல் பார்வை வெளியீடு | மீண்டும் ஒரு அதிரடி, மாஸ் என்டர்டெயின் படம் : விஷால் |

'ரோமாஞ்சம்' மற்றும் 'தளவரா' உள்ளிட்ட மலையாள படங்கள் மூலம் கவனம் பெற்றவர் அர்ஜூன் அசோகன். 'ப்ரோ கோட்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். இந்த நிலையில், அவரது அடுத்த படமான "சத்தா பச்சா" படமும் தமிழில் வெளியாகிறது. இதற்கான டீசர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
ரோஷன் மாத்யூ முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர்களுடன் விசாக் நாயர் மற்றும் இஷான் ஷவுகத் ஆகியோரும் நடிக்கின்றனர். ஷிஹான் ஷவுகத் மற்றும் ரிதேஷ் எஸ் ராமகிருஷ்ணன் இணைந்து தயாரிக்கிறார்கள், அத்வைத் நாயர் இயக்குகிறார்.  அனேந்த் சி. சந்திரன் ஒளிப்பதிவை கவனிக்கிறார் சங்கர் - ஏஹ்சான் - லாய் பாடல்களுக்கு இசை அமைக்கிறார்கள்.  முஜீப் மஜீத் பின்னணி இசை அமைக்கிறார்.
'த ரிங் ஆப் ரவுடீஸ்' என்ற டேக்லைனுடன் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியாகிறது. கொச்சி துறைமுகத்தில் செயல்பட்டு வந்த ஒரு பைட் கிளப்பை மையமாக வைத்து காமெடி கலந்த ஆக்ஷன் படமாக உருவாகி வருகிறது.